- Advertisement -
ஐ.பி.எல்

வீடியோ : புஷ்பான்னா பிளவர்னு நெனைச்சீங்களா? நான் ஃபயரு – ரசிகர்களை நோக்கி ஜடேஜா செய்த இமிடேஷன்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சிகளை அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் அதாவது வருகிற மார்ச் 31-ஆம் தேதி துவங்கும் இந்த 16-வது ஐபிஎல் தொடரானது மே 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாடுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான முதல் போட்டியாக மார்ச் 31-ஆம் தேதி அகமதாபாத் நகரில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றனர். இதன் காரணமாக இந்த முதலாவது போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இரு அணி வீரர்களும் தற்போது தீவிர வலைப்பயிற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே சென்னை வந்தடைந்த சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்கள் வலைப்பயிற்சிஇல் ஈடுபட்டு வந்த வேளையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்துவிட்டு நேரடியாக சென்னை திரும்பிய ஜடேஜா தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய பயிற்சியின்போது கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர்களை பார்த்து புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் தனது தாடியை ஸ்டைலாக தடவும் பாவனையை ஜடேஜா செய்தார். இதனை கண்டதும் ரசிகர்களும் பெரிய அளவில் ஆரவாரத்தை வழங்கினார். இது குறித்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரு ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு – ஆரம்பத்திலேயே ஓப்பனாக அறிவித்த ஹசி

அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய பின்னர் ஜடேஜா புஷ்பா பட பாணியில் பாவனை செய்தது வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by