மைதானத்தில் அமர்ந்திருந்த பார்வையாளரின் டி ஷர்ட்டை மாற்றச்சொன்ன ரவீந்திர ஜடேஜா – என்ன நடந்தது?

Ravindra Jadeja and ENG Fan
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியின் ஐந்தாம் நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை. அதேவேளையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய நான்கு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

பார்வையாளரை டி ஷர்ட் மாற்றச்சொன்ன ரவீந்திர ஜடேஜா :

இதன் காரணமாக இரு அணிகளுக்குமே சரி சமமான வெற்றி வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டி கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்கையில் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஏழாவது வீரராக களத்திற்கு வந்து 77 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் குவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் பேட்டிங் செய்யும்போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான நிகழ்வு தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த இரண்டாவது இன்னிங்ஸின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா திடீரென தனது பேட்டிங்கை பாதியில் நிறுத்தி பார்வையாளர்களில் இருந்த ஒருவரை டி-ஷர்ட்டை மாற்றும் படி அம்பயரிடம் முறையிட்டார்.

அம்பயரும் அதற்கு ஜடேஜாவிடம் ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள்? என்று விசாரித்த போது குறிப்பிட்ட அந்த ரசிகர் அணிந்திருக்கும் சிகப்பு நிற டி ஷர்ட் காரணமாக தன்னால் பந்தை கவனிக்க முடியவில்லை என்பதால் அவரை டீ ஷர்ட்டை மாற்ற சொல்லி கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

ஜடேஜாவின் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அம்பயரும் உடனடியாக மைதான நிர்வாகியை அழைத்து குறிப்பிட்ட அந்த ரசிகர்களின் டி ஷர்ட்டை மாற்றச் சொல்லி கேட்டுக்கொண்டார். பின்னர் மைதான ஊழியர் ஒருவர் அவரிடம் இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்தும் வெளிர் நிற டி-ஷர்டை கொடுத்ததும் அதனை மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்ட அந்த ரசிகர் அவர் அணிந்திருந்த சிகப்பு நிற டி ஷர்ட்க்கு மேலே அந்த வெளிர் நிற டி-ஷர்டை அணிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

இதையும் படிங்க : நான் விளையாடுறேனோ.. இல்லையோ.. டீம் தான் பர்ஸ்ட் எனக்கு முக்கியம் – பூரிக்க வைத்த துருவ் ஜூரேல்

இதனை கவனித்த ரவீந்திர ஜடேஜாவும் அவருக்கு தம்ப்ஸ் அப் செய்து நன்றி தெரிவித்தார். இப்படி ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஓவல் மைதானத்தில் அரங்கேறியது பார்வையாளர்கள் கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement