நாங்களே எதிர்பாக்கல.. அஸ்வின் திடீர்னு ஓய்வு பெற இந்த அவமானமே காரணம்.. அப்பா ஆதங்க பேட்டி

R Ashwin Father
- Advertisement -

இந்திய அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 – 2014 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் 765 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அஸ்வின் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருக்க முக்கிய பங்காற்றினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருது வென்ற வீரர் என்ற முத்தையா முரளிதரன் உலக சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். அப்படிப்பட்ட அவர் 38 வயதானாலும் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அவமானமே காரணம்:

ஆனால் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின் பாதியிலேயே அஸ்வின் அதிரடியாக ஓய்வை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. முன்னதாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் கடந்த பல வருடங்களாகவே இந்திய அணி நிர்வாகம் அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதில்லை. அதனால் அஸ்வின் மனதிற்குள் ஆதங்கத்தையும் அவமானத்தையும் கொண்டிருந்திருக்கலாம் என்று அவருடைய அப்பா ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

அதுவே தங்களிடம் கூட சொல்லாமல் தங்களது மகன் இப்படி ஓய்வு பெற காரணமாக இருந்திருக்கலாம் என்றும் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் எனக்கும் அந்த ஓய்வு கடைசி நிமிடத்தில் தான் தெரிந்தது. அஸ்வின் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது”

- Advertisement -

அப்பா ஆதங்கம்:

“அவர் அறிவித்த ஓய்வை நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவர் ஓய்வு அறிவித்த விதத்தில் ஒரு பகுதி எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மற்றொரு பகுதி மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவர் தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும். ஓய்வு என்பது அவருடைய விருப்பம். எனவே அதில் நான் தலையிட முடியாது. அதை அவர் கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்”

இதையும் படிங்க: 5 வருஷ ஆதங்கம்.. ஓய்வால் நிம்மதியா இருக்கேன்.. சிஎஸ்கேவுக்காக இதை செஞ்சா ஆச்சர்யப்படாதீங்க.. அஸ்வின் பேட்டி

“அது அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை அது அவமானமாக இருக்கலாம். 14 – 15 வருடங்கள் களத்தில் விளையாடிய அவர் திடீரென ஓய்வு பெற்றுள்ளது எங்கள் குடும்பத்திற்கு ஆச்சரியம். அதே சமயம் ஒரு விதமான அவமானம் அவருக்குள் சென்று கொண்டிருந்ததால் நாங்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு நாட்கள் அதை அவரால் சமாளிக்க முடியும்? அதனாலேயே அவர் இந்த முடிவை அறிவித்திருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement