5 வருஷ ஆதங்கம்.. ஓய்வால் நிம்மதியா இருக்கேன்.. சிஎஸ்கேவுக்காக இதை செஞ்சா ஆச்சர்யப்படாதீங்க.. அஸ்வின் பேட்டி

Ashwin 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக திடீரென்று நேற்று அறிவித்தார். 2010 – 2024 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் 765 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் 2011 உலகக் கோப்பை வெற்றியாளர் ஆவார்.

அந்த வகையில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த அவர் திடீரென ஓய்வு பெற்றது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும் 38 வயதாகும் அவர் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. அதே சமயம் ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அஸ்வின் கூறியிருந்தார்.

- Advertisement -

இப்போ தான் நிம்மதி:

இந்நிலையில் ஓய்வு பெறும் முடிவை காபா டெஸ்ட் போட்டியின் 4, 5வது நாளில் தான் இறுதியாக எடுத்ததாக அஸ்வின் கூறியுள்ளார். சொல்லப்போனால் வெளிநாடுகளில் தமக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காததால் ஓய்வு பெற்றுவிடலாம் என்று கடந்த 4 – 5 வருடங்களாகவே சிந்தித்து வந்ததாக அஸ்வின் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்ததாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக நீண்ட காலம் விளையாடினால் ஆச்சரியப்படாதீர்கள் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓய்வு பற்றி அறிவிப்பது மிகவும் கடினமான முடிவா என்று கேட்டால் அப்படி இல்லை. அது பலருக்கும் உணர்ச்சிபூர்வமாக இருந்திருக்கும். அது உணர்ச்சிகரமான இருக்கும். ஒருவேளை அது மூழ்கி விடும்”

- Advertisement -

சிஎஸ்கே அணிக்காக:

“ஆனால் அது எனக்கு பெரிய நிம்மதி மற்றும் திருப்தி. ஏனெனில் அது சிறிது காலங்கள் எனது தலையில் ஓடிக் கொண்டிருந்தது. அது மிகவும் உள்ளுணர்வாக இருந்தது. அதை 4வது நாளில் உணர்ந்து ஐந்தாவது நாளில் எடுத்தேன். அடுத்ததாக நான் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளேன். அங்கே என்னால் முடிந்த வரை விளையாட முயன்றால் ஆச்சரியப்பட வேண்டாம்”

இதையும் படிங்க: கலங்கிய கண்களுடன் அஸ்வினை வரவேற்ற அம்மா.. முத்தமிட்ட அப்பா.. சென்னையில் நெகிழ்ச்சி தருணங்கள்

“அஸ்வின் ஒரு கிரிக்கெட்டராக முடிந்து விட்டார் என்று நான் நினைக்கவில்லை. இந்திய வீரராக அவர் தனது நேரத்தை முடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவ்வளவு தான்” எனக் கூறினார். அந்த வகையில் ஓய்வு பெற்றதே தமக்கு நிம்மதியாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாக அமைகிறது.

Advertisement