மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற 2025 ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்து அசித்தியது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி :
மகளிர் அணி பெற்ற இந்த வெற்றி மிகப்பெரியது : ரவிச்சந்திரன் அஷ்வின் பாராட்டு
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை மட்டுமே குவித்ததால் இந்திய மகளிர் அணியானது 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக மகளிர் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
கடந்த 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஆண்கள் அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரினை வென்றிருந்த வேளையில் தற்போது முதல் முறையாக இந்திய மகளிர் அணியும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றது பெரியளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் கபில்தேவ், தோனி ஆகியோர்களை விட இந்திய மகளிர் அணி இவ்வளவு தூரம் வந்து வெற்றி பெற்றது மிகப்பெரிய விடயம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய மகளிர் அணியை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ஹர்மன்பிரீத் கவுர் இந்திய மகளிர் அணியை பல வகைகளில் இந்த தொடரில் எடுத்து வந்திருக்கிறார். இந்த தொடரின் ஆரம்பத்தில் சில தோல்விகள் ஏற்பட்டபோது அவர் பெரியளவில் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் இறுதியில் இந்திய அணி வெற்று பெற்று சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. கடந்த சில ஆண்டுகளில் எங்கேயோ இருந்த இந்திய மகளிர் அணி தற்போது சாம்பியன் இடத்திற்கு வந்துள்ளது. எனவே இந்த வெற்றியை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.
என்னை பொறுத்தவரை 1983, 2011 உலகக்கோப்பை வெற்றிகளை விட இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றி. இதன்மூலம் தொழில் முறையாக பெண்களும் கிரிக்கெட் விளையாடலாம் என்கிற எண்ணத்தை இந்த வெற்றி அனைவரது மத்தியிலும் விதைத்திருக்கின்றது. இந்த வெற்றியை நாம் மிகப்பெரிய அளவில் கொண்டாட வேண்டும். ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சேர்ந்து இந்த வெற்றியை ஒரு தரமான திரைப்படமாக எடுக்க முடியும்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் நான் பேட்டிங்கில் அசத்த இதுவே காரணம் – வாஷிங்டன் சுந்தர் பேட்டி
ஆனால் இந்த வெற்றியை அப்படி காட்டக்கூடாது. ஒரு வெப் சீரியசாக எடுத்து 8 எபிசோடுகளாக அனைத்து வீராங்கனைகளையும் வைத்து எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அணியில் இடம்பெற்றுள்ள அனைவருக்குமே நெகிழ்ச்சியான பகுதிகள் உண்டு. இந்த வெற்றியில் அனைவருக்குமே சரி சமமான பங்கு உண்டு என்பதனால் அனைவரது கதைகளையும் காண்பித்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என அஸ்வின் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



