
அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வை தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ இறுதி செய்யும் நோக்கோடு சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் போட்டிகளில் பல மாற்றங்கள் நடைபெற்று வரும் வேளையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஏனெனில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருவதால் 2027 உலக கோப்பை தொடரில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆனாலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் மிகச் சிறப்பான ஃபார்மில் ஒருநாள் போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இவ்வேளையில் அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர்களுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வினும் அவர்கள் இருவருக்கும் ஆதரவு தெரிவித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்காக பல ஆண்டுகாலம் விளையாடியவர்கள் அதுமட்டும் இன்றி எத்தனையோ ஐ.சி.சி தொடர்களில் விளையாடியுள்ள அவர்கள் அழுத்தமான சூழலை எவ்வாறு சமாளிப்பது என்பதை முற்றிலும் அறிந்து வைத்துள்ளார்கள். அவர்களது அனுபவம் நிச்சயம் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும். அதோடு இந்திய அணியின் ஓய்வறையிலும் அவர்கள் இருவரை போன்ற அனுபவ வீரர்கள் இருப்பது அணியின் சூழ்நிலையும் மிகச் சிறப்பாக வைத்திருக்கும்.
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணி ஹார்டிக் பாண்டியாவை வாங்க நெனச்சா இதை செய்ஞ்சா போதும் – மைக்கல் வாகன் கொடுத்த ஐடியா
இன்றளவும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் வேளையில் அவர்கள் ஏன் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாட வைக்கக்கூடாது? என்னை பொறுத்தவரை அவர்கள் இருவரும் உலககோப்பை முதன்மை அணியில் இடம்பெற வேண்டும் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.