
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதற்கு அடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு நடைபெற இருக்கும் போட்டிகளில் விளையாட இருக்கும் வேளையில் தற்போதில் இருந்தே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 உலக கோப்பையை குறிவைத்து அடுத்த கட்ட நகர்வுகளை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்களையும் நிகழ்த்தி வருகின்றன.
அந்த வகையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரை வென்றுவிட்டு விடைபெற காத்திருக்கும் வேளையில் அவர்களது இடத்திற்கு சரியான வீரர்களை தேர்வு செய்யும் பணியையும் தற்போது நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் தனது வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் 2027 உலக கோப்பை தொடருக்கான அணியில் இருப்பார் என்று பலரும் யூகம் தெரிவித்து வருகின்றனர். இவ்வேளையில் எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இஷான் கிஷனை அவசரப்பட்டு தேர்வு செய்யக்கூடாது என்றும் ரிஷப் பண்ட்டின் பெயரை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை கே.எல் ராகுல் தான் ஒருநாள் போட்டிகளுக்கான முதன்மை விக்கெட் கீப்பராக முதல் தேர்வாக இருப்பார். அவருக்கு அடுத்து மாற்று விக்கெட் கீப்பராக இஷான் கிஷனை சீக்கிரம் தேர்வு செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ரிஷப் பண்ட்டை பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். அதேபோன்று அவரை அவ்வளவு எளிதாக விடுவிப்பது நியாயம் கிடையாது.
இதையும் படிங்க : இன்னும் 4 வருஷத்துக்கு நோ பிராப்ளம்.. விராட் கோலியின் ஐ.பி.எல் எதிர்காலம் குறித்து – ராஜேஷ் மேனன் பேட்டி
இஷான் கிஷன் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று கருதி அவரை தேர்வு செய்தால் அது தவறான முடிவாக மாறும். ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை தற்போது பலவீனமான அணியாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக இஷான் கிஷன் ரன் குவித்ததை பெரிதாக பார்க்கக்கூடாது. சரியான முறையில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.