கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடம்பெயர்ந்து அங்கிருந்து சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்குள் வந்துள்ளார். இப்படி கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்றதும் கேப்டன் பதவி அவருக்கு கிடைக்கும் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது.
ரவீந்திர ஜடேஜா விடயத்தில் நான் இதை எதிர்பாக்கல : ரவிச்சந்திரன் அஷ்வின்
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இளம் வீரரான ரியான் பராக்கை அந்த அணியின் நிர்வாகம் கேப்டனாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இனி அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கேப்டன் பதவிக்காக காத்திருக்கும் வேளையில் ரியான் பராக் அந்த அணியின் கேப்டனாக வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜடேஜா இணைந்த போது அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் எதிர்பாராதது நடந்துள்ளதாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரியான் பராக் உள்நாட்டு போட்டிகளில் அசாம் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார்.
பொதுவாகவே ஐபிஎல் போட்டிகளின் போது எதிர்காலத்தை யோசித்து கேப்டன் பொறுப்பை வழங்குவார்கள். அந்த வகையிலே ரியான் பராக்கை அடுத்த கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளையில் ஜடேஜாவை கேப்டனாக மாற்றி ரியான் பராக்கை துணை கேப்டனாக வளர்த்தெடுப்பார்கள் என்று நான் நினைத்தேன்.
இதையும் படிங்க : குஜராத் டைட்டன்ஸ் அணியிலுருந்து வெளியே வரனும்னு வாஷிங்டன் சுந்தர் நெனச்சி இருப்பாரு – அபினவ் முகுந்த் கருத்து
ஆனால் வித்தியாசமாக வேறு ஒரு முடிவு தற்போது கிடைத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா மற்றும் குமார் சங்கக்காரா ஆகிய இருவரின் அனுபவம் மற்றும் அறிவுரைகளை பராக் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐபிஎல் போன்ற போட்டிகளில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அதை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு கேப்டன் தயாராக இருக்க வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



