தோணி செய்த தவறு இதுதான்…CSK வை இப்படி தான் தோற்கடித்தோம் – அஸ்வின் ஓபன் டாக் !

Ashwin

சென்னை அணிக்காக இவ்வளவு காலமாக விளையாடிவந்த அஸ்வின் இந்ந ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு கேப்டனாக தேர்வுசெய்யப்பட்டார்.முந்தைய போட்டிகளில் பலித்த தோனியின் வியூகம் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கெதிரான மூன்றாவது போட்டியில் பலிக்கவில்லை எனலாம்.

சென்னை – பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் தோனியை விடவும் அஸ்வினின் கேப்டன் அனைவரையும் சபாஷ் போடவைத்தது எனலாம்.சென்னை அணிக்கு எதிராக அஸ்வின் அமைத்த வியூகத்தில் சிக்கி சென்னை அணி தனது வெற்றியை இழந்தது என்றே சொல்லலாம்.

கடந்த இரண்டுபோட்டிகளில் கெயிலை களமிறக்காமல் வைத்திருந்த பஞ்சாப் அணி சென்னைக்கு எதிரான போட்டியின்போது அதிரடி ஆட்டக்காரரான கெயிலை களமிறக்கியது.சென்னை அணியினரின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கிய கெயில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.33 பந்துகளில் 7பவுண்டரிகள் மற்றும் 4சிக்ஸர்கள் உட்பட 63 ரன்களை விளாசி தள்ளினார்.

dhoni

மறுபக்கம் கே.எல்.ராகுல் 22பந்துகளில் 37 ரன்களை எடுக்க பின்னர் வந்த வீரர்களும் சீராக விளையாடிட பஞ்சாப் அணி 20ஓவர்களின் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது.பின்னர் 198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.

- Advertisement -

தோனி செய்த முதல் தவறு இங்கே தான். முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்த ஷேன்வாட்சன் – அம்பத்தி ராயுடு கூட்டணியை உடைத்து இந்த போட்டியில் முந்தைய போட்டிகளில் களமிறங்காத முரளி விஜயை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார்.மிகப்பெரிய வெற்றி இலக்கான 198 ரன்களை எடுக்க வேண்டிய காரணத்தால் அதிரடியாக விளையாட முற்பட்டு விரைவில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் ஷேன் வாட்சன்.

ஷேன்வாட்சன் அவுட்டான அடுத்த சில ஓவர்களிலேயே முரளிவிஜயும் அவுட்டாகி வெளியேற சென்னை அணி 5 ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்களை இழந்து தவித்தது.கடந்த ஆட்டத்தில் அதிரடி காட்டி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற பில்லிங்ஸ் 9ரன்கள் எடுத்திருந்தபோது பஞ்சாப் அணியின் கேப்டன் பில்லிங்ஸின் விக்கெட்டை வீழ்த்த சென்னை அணியின் வெற்றிக்கனவு கலைந்தது.

kings

இருப்பினும் அம்பத்தி ராயுடு மற்றும் தோனி கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு நிதானமாக ஆடி ரன்களை சேர்த்திட அம்பத்தி ராயுடு அடிக்கடி சில பவுண்டரிகளை அடித்து சென்னை அணியின் ரன்ரேட்டை படிப்படியாக உயர்த்தினார்.நன்றாக விளையாடிக்கொண்டிருந்த அம்பத்தி ராயுடுவின் விக்கெட்டை 14-வது ஓவரில் 2-வது பந்தில் மீண்டும் அஷ்வின் எடுக்க அடுத்ததாக பிராவோ களமிறங்கி தனது சிக்ஸர் மழையால் சென்னை அணியை வெற்றி பெற வைப்பார் என்று சென்னை ரசிகர்கள் நினைத்திருந்தபோது அவர்களது ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டார் தோனி.

வழக்கமாக இக்காட்டான சூழலில் களமிறக்கப்படும் பிராவோவிற்கு பதிலாக இந்தமுறை பேட்டிங்கில் ஏற்கனவே திணறி வரும் ஜடேஜாவை களமிறக்கிவிட்டார். குறைந்த பந்துகளில் அதிக ரன்களை தேவைப்பட்ட நிலையில் பிராவோவை களமிறக்காமல் ஜடேஜாவை களமிறக்கியது ஏன் என தற்போதுவரையிலும் பலருக்கு விளங்கவே இல்லை.

வேற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அடித்து ஆடமுடியாமல் திணறிய ஜடேஜா பந்துகளை வீணாக்கி கடைசியில் அவுட்டானார்.ஜடேஜாவின் ஆட்டத்தில் கடுப்பான தோனி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.ஜடேஜா அவுட்டான பின்னர் பிராவோ பேட்டிங் செய்ய வர
கடைசி ஓவரில் தோனியும், பிராவோவும் களத்தில் நின்றனர்.

MS

கடைசி ஓவரை மோகித்சர்மா வீச 6 பந்துகளில் சென்னை அணி வெற்றிபெற 17 ரன்கள் தேவை என்கிற நிலை ஏற்பட்டது.கடைசி ஓவரை அபாரமாக வீசிய மோகித்சர்மா தோனிக்கும், பிராவோவுக்கும் யார்கர்களை இறக்கினார். இதனால் கடைசி ஓவரில் இரு சிங்கள் ரன்களும், 4-வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்ஸரும் மட்டுமே தோனியால் அடிக்க முடிந்தது.

இந்த ஓவரில் மோகித்சர்மா ஒரு வைடு போட்டார்.இறுதியாக சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.தோனி செய்த சில தவறுகளால் இலகுவாக வென்றிருக்க வேண்டிய போட்டியை தோற்றது ரசிகர்களிடையே எரிச்சலடைய வைத்துள்ளது.