ஐபிஎல் 2025 : இதுல என்ன தப்பு இருக்கு.. அதானே உண்மை.. தல தோனிக்கு ஆதரவாக பேசிய அஸ்வின்

- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக காணப்படுகிறது. கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் 42 வயதை கடந்துள்ள அவர் சமீப காலங்களில் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப பொறுப்பை இந்த வருடம் ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். மறுபுறம் ருதுராஜ் தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி சென்னையில் நடைபெற்ற ஃபைனலில் கோப்பையை வென்று தோனியை வெற்றிகரமாக வழியனுப்பும் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

அஸ்வின் ஆதரவு:
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளது. அதே காரணத்தால் அதிகபட்சமாக ஒரு அணியால் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அது போன்ற நிலையில் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே தாம் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று எம்.எஸ். தோனி சமீபத்தில் மறைமுகமாக தெரிவித்தார்.

மறுபுறம் தோனியை அன்கேப்ட் வீரராக தக்க வைக்க அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐயிடம் சென்னை நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 வருடங்கள் கடந்த வீரரை அன்கேப்ட் வீரராக கருதி குறைந்தபட்ச விலைக்கு தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை இருந்தது. அந்த விதிமுறையை மீண்டும் பயன்படுத்தி தோனியை 20 லட்சத்திற்கு தக்க வைக்க அனுமதிக்குமாறு பிசிசிஐக்கு சிஎஸ்கே கோரிக்கை வைத்துள்ளது.

- Advertisement -

ஆனால் அதற்கு ஹைதராபாத் போன்ற மற்ற அணி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தோனியை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதி குறைந்த விலைக்கு தக்க வைப்பதில் எந்த தவறுமில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே சிஎஸ்கே நிர்வாகம் விரும்புவது போல தோனி விளையாட வேண்டும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 2025 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக புதிய அணிக்கு கேப்டனாக செல்லவுள்ள ஹார்டிக் பாண்டியா – எந்த அணிக்கு தெரியுமா?

இது பற்றி யூடியூப் பக்கத்துல அவர் பேசியது பின்வருமாறு. “தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா என்ற கேள்வி காணப்படுகிறது. உண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட வருடமாக விளையாடாத அவர் அன்கேப்ட் பிளேயர் தானே. ஆனால் தோனி போன்ற வீரர் அன்கேப்ட் வீரராக விளையாடலாமா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. தோனியை பற்றி பேசினாலே அதற்கு அனைவரும் காது மூக்கு வைத்து பேசுவார்கள்” என்று கூறினார்.

Advertisement