ஜாம்பவான் ஜஹீர் கான், ஆஸியின் ஹேசல்வுட் சாதனைகளை.. உடைத்து அஸ்வின் படைக்க உள்ள 2 சாதனைகள்

Ashwin Zaheer Khan
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. எனவே ஃபைனலுக்கு தகுதி பெற அந்தத் தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாடத் தயாராகியுள்ளது.

அந்தத் தொடரில் சமீபத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது போல் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச அணியினர் எச்சரிக்கை எச்சரித்து வருகிறார்கள். ஆனால் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக இந்தியா ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வருகிறது. அதனால் இத்தொடரிலும் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்பதே இங்குள்ள ரசிகர்களின் நம்பிக்கையாகும்.

- Advertisement -

அஸ்வின் சாதனைக்கு வாய்ப்பு:

அது போக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய தரமான ஸ்பின்னர்களை தாண்டி சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் வங்கதேசம் வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜாகிர் கான் 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

அதனால் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் 23* விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார். எனவே அடுத்த 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் ஜஹீர் கானை முந்தி வங்கதேசத்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக அஸ்வின் வரலாற்று சாதனை படைப்பார்.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாயகன்:

அதே போல 2023 – 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகள் (51*) எடுத்த வீரராக ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ரவிச்சந்திரன் 42* விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார். எனவே வங்கதேச தொடரில் இன்னும் 10 விக்கெட்டுகள் எடுத்தால் 2023 – 25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக அஸ்வின் உலக சாதனை படைப்பார்.

இதையும் படிங்க: என்னையா கலாய்க்கிறீங்க.. 9 விக்கெட்ஸ் 87 ரன்ஸ்.. உள்ளூர் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர்.. ஐபிஎல் ஏலத்துக்கு முன் அசத்தல்

குறிப்பாக முதல் போட்டி அஸ்வின் பிறந்து வளர்ந்த சென்னையில் நடைபெறுகிறது. எனவே அந்தப் போட்டியில் அஸ்வின் நிறைய விக்கெட்டுகளை எடுப்பார் என்று தமிழக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மொத்தத்தில் சமீபத்தில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அஸ்வின் மேற்குறிப்பிட்ட 2 சாதனைகளை படைப்பதற்கும் பிரகாச வாய்ப்புகள் உள்ளது.

Advertisement