இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக தம்முடைய கேரியரை துவங்கியுள்ளார். ஆனால் ஜாம்பவானின் மகன் என்பதால் சீக்கிரம் வாய்ப்பு கொடுத்து விட்டார்கள் என்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவே மும்பை அணி நிர்வாகம் அவரை 2021, 2022 சீசன்களில் முழுமையாக பெஞ்சில் அமர வைத்தது.
அதைத் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பையிலிருந்து வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடத் துவங்கினார். அந்த வாய்ப்பில் 2023 ரஞ்சிக் கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய அவருக்கு ஒரு வழியாக 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் 120 – 130கி.மீ என்ற சாதாரண வேகத்தில் வீசிய அவரை பஞ்சாப் வீரர்கள் அடித்து நொறுக்கினார்கள்.
என்னையா கலாய்க்கிறீங்க:
அதனால் சச்சின் டெண்டுல்கரின் திறமையில் பாதி கூட இவருக்கு இல்லை என்று பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அத்துடன் இந்த வேகத்தை வைத்துக்கொண்டு ஐபிஎல் தொடரில் காலம் தள்ள முடியாது என்றும் ரசிகர்கள் கிண்டலடித்தனர். இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் டாக்டர் கே திம்மப்பையா நினைவு உள்ளூர் தொடரில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.
அந்தத் தொடரில் கர்நாடக வாரியம் மற்றும் கோவா அணிகள் ஒரு போட்டியில் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 36.5 ஓவரில் வெறும் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கோவா அணிக்கு அதிகபட்சமாக அர்ஜுன் டெண்டுல்கர் 13 ஓவரில் 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த கோவா 413 ரன்கள் குவித்து அசத்தியது.
9 விக்கெட்ஸ்:
அதன் பின் விளையாடிய கர்நாடக அணி மீண்டும் சுமாராகவே பேட்டிங் செய்து 30.4 ஓவரில் 121 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு எதிராக மீண்டும் அர்ஜுன் டெண்டுல்கர் 30.4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த வகையில் மொத்தமாக அவர் 87 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து கோவா இன்னிங்ஸ் மற்றும் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
இதையும் படிங்க: மழையால் தப்பிச்சிங்க.. ஆஸ்திரேலிய அணியை ஓப்பனாக கிண்டலடித்த பென் ஸ்டோக்ஸ்.. காரணம் என்ன
அதனால் தம்மை கிண்டலடித்தவர்களுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் சிறிய பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2024 ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. அந்த சூழ்நிலையில் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ள காரணத்தால் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை நிர்வாகம் மீண்டும் ஏலத்தில் வாங்குமா எதிர்பார்ப்பு காணப்படுகிறது.



