- Advertisement -
ஐ.பி.எல்

சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக வாய்ப்பே இல்ல.. காரணத்தை கூறிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

கடந்த சில நாட்களாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியே வர விரும்பும் சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேடிங் செய்ய இருக்கிறது என்பது குறித்த தகவல்களே அதிகளவு வெளியாகி வருகின்றன. மேலும் சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது கிட்டத்தட்ட உறுதி என்றும் அப்படி சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேடிங் செய்வதால் சென்னை அணியில் பல ஆண்டுகாலமாக விளையாடி வந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜா மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக மாட்டார் : ரவிச்சந்திரன் அஷ்வின்

இப்படி சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை அணிக்கு வருவது ஒருபுறம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மறுபுறம் ஜடேஜா சென்னை அணியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரும் பட்சத்தில் அவர் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அவர் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக செயல்படுவாரா? அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டே தொடர்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்தாலும் இந்த ஆண்டு அவர் கேப்டனாவதற்கு வாய்ப்பே இல்லை என சென்னை அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த மூன்று ஆண்டுகளாக ஜடேஜா சிஎஸ்கே அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த அவர் 2023 ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறவும் மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே 44 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 38 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும் பேட்டிங்கின் போது ஃபினிஷராக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவருக்கும் எதிராக 150-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் கேட்டுடன் விளையாடி வரும் அவர் மிகச் சிறப்பான பினிஷராக திகழ்ந்து வந்ததால் அவர் ராஜஸ்தான் அணிக்கு செல்லும் பட்சத்தில் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பலனை அளிக்கும். அதேவேளையில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரும் பட்சத்தில் அவர் நேரடியாக இந்த ஆண்டு கேப்டனாக முடியாது.

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ஏனெனில் சென்னை அணியின் நிர்வாகம் ருதுராஜ் கெய்க்வாட்டின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது. அதேபோன்று சென்னை அணிக்கு வந்த முதல் ஆண்டிலேயே சஞ்சு சாம்சனுக்கு கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்படாது என்று நினைக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் அவரை கேப்டனாக்கும் யோசனை இருக்கலாம் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -