இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் மினி ஏலமானது தற்போது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்த மினி ஏலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ள வேளையில் அவர்களில் 77 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். அதன் காரணமாக எந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மினி ஏலத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் வீரர் : ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்நிலையில் இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி வீரரான ஆண்ட்ரே ரசல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் தான் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்து விட்டார்.
அதனால் இந்த மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகக்கூடிய வீரர் யார்? என்ற கேள்வியும் பலரது மத்தயிலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளம் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் இந்த 2026 மினி ஏலத்தில் அதிக விலைக்கு செல்லக்கூடிய வீரர் யார்? என்பது குறித்த தனது கருத்தினை முன்னாள் இந்திய வீரரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
கேமரூன் கிரீனை இப்போதே சிட்னி துறைமுகத்திற்கு அருகே நான்கு அல்லது ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்க சொல்லிவிடலாம். ஏனெனில் இந்த மினி ஏலத்தில் ஆண்ட்ரே ரசல், கிளென் மேக்ஸ்வெல் போன்ற யாரும் கிடையாது. இந்த சூழலில் தான் கேப்டன் கேமரூன் கிரீன் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : 24 மணி நேரமும் எங்களுக்காக திறந்திருக்கும் தோனி.. பயிற்சியில் இதை செஞ்சு பார்த்ததில்ல.. ஹசி பேட்டி
சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் மேக்ஸ்வெல்லை ஆறாவது இடத்தில் கொண்டு வர காத்திருந்தார்கள். ஆனால் அவர் ஏலத்தில் பங்கேற்கவில்லை. எனவே லியாம் லிவிங்ஸ்டன் அல்லது கேமரூன் கிரீன் ஆகிய இருவரில் ஒருக்கு இந்த மினி ஏலத்தின் போது மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தார்.



