- Advertisement -
இந்திய கிரிக்கெட்

யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடிக்க உன்னால் முடியும் தம்பி.. இளம் வீரரை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக யுவ்ராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் உலகிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்த வீரராக இன்றளவும் இருந்து வருகிறார். அவரது இந்த சாதனையை இதுவரையும் யாரும் முறியடிக்காமல் இருந்து வருகிறார்கள்.

யுவ்ராஜ் சிங்கின் சாதனையை உன்னால் முறியடிக்க முடியும் : அஷ்வின்

இவ்வேளையில் நேற்று முன்தினம் கௌஹாத்தி நகரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக விளையாடிய துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங்கிற்கு அடுத்து அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

- Advertisement -

அந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய அபிஷேக் ஷர்மா யுவராஜ் சிங்கின் அந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிக்கும் ஒரே நபர் என்றால் அது அபிஷேக் சர்மா தான் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

பவர்பிளே ஓவர்களில் நம்ப முடியாத அளவிற்கு அபிஷேக் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்கிறார். கடந்த போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் விக்கெட்டுகள் விழுந்தாலும் பெரிய பெரிய சிக்சர்களை அடிக்கிறார். அவருடைய பேட் ஸ்விங் மற்றும் வேகம் என அனைத்துமே அற்புதமாக இருக்கிறது. அதன் காரணமாகவே அவரால் நம்ப முடியாத அளவிற்கு பேட்டிங் செய்ய முடிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரிட்டயர்மென்ட்டை விட இந்த விடயம் ரொம்ப கஷ்டம்.. அதை நான் அனுபவிச்சிருக்கேன் – கே.எல் ராகுல் வெளிப்படை

கடந்த போட்டியின் போது யுவராஜ் சிங் சாதனையை முறியடிப்பது கடினம் என்று நீ கூறியிருந்தாய் தயவுசெய்து இவ்வளவு பணிவாக நீ இருக்கக் கூடாது. நிச்சயம் யுவராஜ் சிங்கின் சாதனையை கட்டாயம் உங்களால் முறியடிக்க முடியும். எதிர்காலத்தில் நீங்கள் அதை செய்வீர்கள் என்று தான் நம்புவதாகவும் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -