ரிட்டயர்மென்ட்டை விட இந்த விடயம் ரொம்ப கஷ்டம்.. அதை நான் அனுபவிச்சிருக்கேன் – கே.எல் ராகுல் வெளிப்படை

KL Rahul
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றாலும் தொடர்ச்சியாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை முதன்மை துவக்க வீரராகவும், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார்.

ஓய்வை விட இந்த விடயம் ரொம்ப கஷ்டம் : கே.எல் ராகுல் வெளிப்படை

இந்திய அணிக்காக பல ஆண்டு காலம் அவர் விளையாடி வரும் வேளையில் தற்போது 33 வயதை எட்டியுள்ள கே.எல் ராகுல் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். எனவே இன்னும் சில ஆண்டுகளில் அவர் ஓய்வு பெற்று வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் இன்னும் சில ஆண்டுகள் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் கிரிக்கெட்டை விட்டு விலகி ஓய்வு பெறுவது குறித்து சில எதார்த்தமான கருத்துகளை கே.எல் ராகுல் முன்னாள் இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது எனக்கு மிகப்பெரிய கஷ்டமாக இருக்கும் என்று தோன்றவில்லை.

ஏனெனில் எப்போது நமது நேரம் முடிகிறது என்று தெரிகிறதோ அப்போதே நான் ஓய்வு முடிவை எடுத்து விடுவேன். ஆனாலும் தற்போதைக்கு ஓய்வு என்பது சற்று தொலைவில் இருக்கிறது என்று நினைக்கிறேன். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை விட காயமடைந்து வெளியில் இருப்பது கடினம் என்று நினைக்கிறேன். நிறைய போட்டிகளை நான் காயம் காரணமாக என்னுடைய கரியரில் இழந்திருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் 2 அசத்தல் சாதனைகளை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ

கிரிக்கெட் எனக்கு போதுமான பணம் வழங்கி இருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு என்னால் வாழ முடியும். கிரிக்கெட்டை விட குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டு வருகிறேன். எனது முதல் குழந்தை பிறந்ததிலிருந்து என்னுடைய வாழ்க்கையே வேறு மாதிரி மாறிவிட்டது என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement