நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் 2 அசத்தல் சாதனைகளை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ

IND vs NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்றுள்ள முதல் மூன்று ஆட்டங்களில் முடிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்த தொடரை ஏற்கனவே கைப்பற்றி அசத்தியது.

இந்திய அணி நிகழ்த்திய 2 அசத்தல் சாதனை :

அதனை தொடர்ந்து இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த டி20 தொடரை கைப்பற்றியதோடு சேர்த்து சொந்த மண்ணில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமான இரண்டு அசத்தல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வரும் வேளையில் இந்த நியூசிலாந்து தொடரையும் சேர்த்து மொத்தமாக 11 டி20 தொடர்களை தொடர்ச்சியாக வென்று பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடரில் தோனி எந்த இடத்தில் விளையாடுவார்? அஷ்வின் வெளியிட்ட கணிப்பு – விவரம் இதோ

அதோடு சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பத்தாவது டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்படி இரண்டு முக்கிய சாதனைகளை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. (குறிப்பு : சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இதுவரை எந்தவொரு டி20 தொடரையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

Advertisement