இதுவே விராட், ரோஹித்துக்கு உலக கோப்பையில் அப்டி நடந்தா சும்மா விடுவாங்களா? விமர்சனங்களுக்கு அஸ்வின் காட்டமான பதிலடி

- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் செய்து கோப்பையை வென்றதுடன் ஐசிசி தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளது. முன்னதாக அந்த தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் 300 ரன்களை சேசிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது சடாப் கான் அதிரடியாக 48 (35) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தை முழுமையாக வீசி முடிப்பதற்கு முன்பாகவே அவசர அவசரமாக ரன் எடுப்பதற்காக எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறிய அவரை சரியாக கவனித்த பவுலர் பரூக்கி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இறுதியில் நசீம் ஷா 10* ரன்கள் அடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது வேறு கதை. ஆனால் அப்போட்டியில் மன்கட் செய்த ஆப்கானிஸ்தான் அணியினர் கடைசி நேரத்தில் வெற்றியை படிப்பதற்காக வேண்டுமென்றே நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வழக்கம் போல விமர்சித்தனர்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:
இந்நிலையில் உலகக்கோப்பை செமி ஃபைனல் போன்ற மிகப்பெரிய போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற பெரிய நட்சத்திர வீரர்களை இதே போல மன்கட் செய்தால் அந்த பவுலரை யாரும் சும்மா விடாத அளவுக்கு திட்டி தீர்த்து விடுவார்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். எனவே இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு “மன்கட் செய்வதில் தவறில்லை ஆனால் அதற்கு முன் பேட்ஸ்மேனுக்கு பவுலர் ஒரு முறை எச்சரிக்கை கொடுக்க வேண்டும்” என்று ரசிகர் பதிவிட்ட கருத்து மிகவும் சரியானது என தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு.

“இது அந்த நிலைமையின் நியாயமான மதிப்பீடாகும். இந்த சமயத்தில் உலகக்கோப்பையின் செமி ஃபைனல் அல்லது வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான நேரத்தில் ஒரு பவுலர் கோலி, ரோஹித், ஸ்மித், ரூட் அல்லது வேறு எந்த முக்கியமான பேட்ஸ்மேனை எதிர்ப்புறமிருந்து பவுலர் ரன் அவுட் செய்வதாக வைத்துக் கொள்வோம். அது போன்ற சமயங்களில் ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் அவரை மோசமாக திட்டி தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“இதற்கு ஒரு தீர்வு என்னவெனில் பேட்ஸ்மேன் யாராவது இருந்தாலும் நிலைமை எதுவாக இருந்தாலும் அவர்கள் பவுலரின் ஆக்சனை நன்றாக பார்க்க வேண்டும். ஒருவேளை அதை பேட்ஸ்மேன் செய்யாமல் போனால் மன்கட் செய்யும் பவுலரை நாம் பாராட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு பவுலர் ஆக்சனை முடிக்கவில்லை அல்லது 5, 6வது ஓவரில் என் மன்கட் கை முறிச்சிக்க வில்லை என்ற விவாதங்கள் தேவையற்றது. மேலும் தற்சமயத்தில் அனைத்து அணிகளும் அதை செய்ய விரும்புவதில்லை”

இதையும் படிங்க:ஆசியக்கோப்பை 2023 : இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

“ஆனால் கோப்பையில் அதை செய்ய அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் நியாயத்தின் அடிப்படையில் அனைத்து அணிகளும் வாழ்நாள் சாதனையான உலகக் கோப்பையை வெல்வதற்கான சாதகத்தை எடுக்க முயற்சிப்பார்கள். இருப்பினும் வெற்றி மட்டும் தான் அனைத்துமா? என்று கேட்கலாம். அதை சிலர் ஏற்றுக்கொள்வார்கள் ஏற்க மாட்டார்கள். இதற்கு ஒரே தீர்வு வெள்ளைக்கோட்டுக்கு உள்ளே மகிழ்ச்சியுடன் இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement