- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அனில் கும்ப்ளே சொல்லிருக்காரு.. அதுக்கு ஆசைப்படல.. நான் உடைக்க விரும்பிய ரெகார்ட் இது தான்.. அஸ்வின் பேட்டி

இந்திய அணியின் மூத்த ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516* விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். அத்துடன் அனில் கும்ப்ளேவுக்கு பின் டெஸ்ட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராகவும் அஸ்வின் வரலாறு படைத்தார்.

அந்த சூழ்நிலையில் தற்போது 38 வயதை தொட்டுள்ள அஸ்வின் இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகள் சாதனையை ஓய்வு பெறுவதற்குள் அஸ்வின் உடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில் தம்முடைய சாதனையை நீங்கள் உடைக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே கூறியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அனில் கும்ப்ளேவின் சாதனை:

இருப்பினும் அதை உடைத்து சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை தமக்கில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார். அதே சமயம் பேட்டிங்கில் யுவராஜ் சிங் போல ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற தம்முடைய ஆசை நிறைவேறாமலேயே கேரியர் முடியப் போவதாகவும் அஸ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“எனக்கு நானே எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. அனில் பாய் அவருடைய சாதனையை நான் உடைக்க விரும்புகிறார். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் இருக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு வாழ்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏதேனும் இலக்கை உருவாக்கி கிரிக்கெட்டின் மீது என்னுடைய ஆர்வத்தை இலக்க நான் விரும்பவில்லை”

- Advertisement -

அஸ்வின் கேரியர்:

“அதே சமயம் நான் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிக்க விரும்புகிறேன். ஆனால் அது எப்போதும் நடக்கவில்லை. எனவே தற்போது சாதனைகளை உடைக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் எனது மனதில் இல்லை. தற்போதெல்லாம் நான் ஒவ்வொரு நாளை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். ஏனெனில் வயது அதிகரிக்கும் போது நீங்கள் ஒவ்வொரு நாளிலும் எக்ஸ்ட்ரா முயற்சிகளை போட வேண்டும்”

இதையும் படிங்க: 101, 200 கணக்கே வேணாம்.. அவங்க இதை செஞ்சா போதும்.. 5 – 0ன்னு இந்தியாவை வீழ்த்துவோம்.. நேதன் லயன்

“அப்படி கடந்த 3 – 4 வருடங்களாகவே நான் அதிக முயற்சிகளை போட்டு வருகிறேன். இங்கே விளையாடும் நாங்கள் அனைவரும் ஒரு நாள் இங்கிருந்து செல்வோம். அந்த இடத்திற்கு மற்றவர்கள் வந்து நன்றாக விளையாடுவார்கள். அது தான் இந்திய கிரிக்கெட்” என்று கூறினார். மொத்தத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 744* விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின் இப்போதே ஜாம்பவானாக போற்றப்படுகிறார்.

- Advertisement -