நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிக்காக போராடி வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்து தொடரை வென்று விட்ட நிலையில் இப்போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 82, வில் எங் 71 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 வாஷிங்டன் சுந்தர், 4 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணி போராடி தங்களுடைய முதல் இன்னிங்சில் 263 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90, ரிஷப் பண்ட் 60, ஜெய்ஸ்வால் 30 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
அஸ்வின் அசத்தல்:
அதன் பின் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து 2வது நாள் முடிவில் 171-9 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக வில் எங் 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு இதுவரை ஜடேஜா 4*, அஸ்வின் 3* விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். தற்சமயத்தில் 143 ரன்கள் முன்னிலையில் இருக்கும் நியூசிலாந்தின் எஞ்சிய 1 விக்கெட்டை எடுத்து இலக்கை துரத்துவதற்கு இந்தியா போராட உள்ளது.
இந்நிலையில் டேரில் மிட்சேல் கொடுத்த கேட்ச்சை தன்னம்பிக்கையுடன் பிடித்ததாக தெரிவிக்கும் அஸ்வின் மும்பை பிட்ச் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக கூறியுள்ளார். எனவே வெற்றி பெறுவதற்கு சிறப்பாக பேட்டிங் செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த கேட்ச்சை விடக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்”
அஸ்வின் நம்பிக்கை:
“அதற்காக முடிந்தளவுக்கு பந்தை நெருங்குவதற்கு விரும்பினேன். பின்னர் என்னுடைய நல்ல கைகளை நம்பி அதை சரியாக பிடித்தேன். கேரம் பந்துகளைப் பொறுத்த வரை 2 சவால்கள் இருந்தது. பெவிலியன் திசையிலிருந்து பந்து வீசுவதை விட மற்றொரு பக்கத்திலிருந்து வீசும் போது பிட்ச் வித்தியாசமாக இருக்கிறது. அது பெவிலியன் பக்கத்திலிருந்து வீசுவதை விட கொஞ்சம் பிளாட்டாக இருக்கிறது”
இதையும் படிங்க: 143 ரன்ஸ்.. 5 நொடியில் 19மீ அசத்திய அஸ்வின், ஜடேஜா.. நியூஸிலாந்தை மிரட்டும் இந்தியா.. சவாலில் சாதிக்குமா?
“அங்கே பவுன்ஸ் கொஞ்சம் குறைவாக இருப்பதால் அதை வித்தியாசமான வழியில் பயன்படுத்தலாம் என்று நான் முயற்சித்தேன். விரைவில் ஓரிரு ரன்களுக்குள் நியூசிலாந்தை நாங்கள் அவுட் செய்வோம் என்று நம்புகிறேன். இந்த இன்னிங்ஸில் சேமிக்கப்படும் ரன்கள் நாங்கள் சேசிங் செய்யும் போது முக்கியமாக இருக்கும். சேசிங்கில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் அது எளிதாக இருக்காது. மும்பையில் அதிக வேகம், பவுன்ஸ் குறைவாக இருப்பது எனக்கு ஆச்சரியமாகும். அது வழக்கமான பாம்பே பிட்ச்சை விட மெதுவாக இருக்கிறது” என்று கூறினார்.