143 ரன்ஸ்.. 5 நொடியில் 19மீ அசத்திய அஸ்வின், ஜடேஜா.. நியூஸிலாந்தை மிரட்டும் இந்தியா.. சவாலில் சாதிக்குமா?

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி முதல் மும்பையில் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே தொடரை வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில் எங் 71, டேரில் மிட்சேல் 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா முடிந்தளவுக்கு போராடி 263 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் சதத்தை நழுவ விட்டு 90 ரன்ளும் ரிஷப் பண்ட் 60 ரன்களும் ஜெய்ஸ்வால் 30 ரன்களும் குவித்து அசத்தினார்கள். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

போராடும் இந்தியா:

பின்னர் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் இறங்கிய நியூசிலாந்துக்கு கேப்டன் டாம் லாதம் 1 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் போல்ட்டானார். மறுபுறம் நிதானமாக விளையாடிய டேவோன் கான்வேயை 22 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் அவுட்டாக்கிய நிலையில் அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார்.

இருப்பினும் மறுபுறம் வில் எங் நிதானமாக விளையாடி நிலையில் எதிர்புறம் வந்த டேரில் மிட்சேலை 21 ரன்களில் அவுட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா அடுத்து வந்த டாம் பிளண்டலை 4 ரன்களில் போல்டாக்கினார். குறிப்பாக மிட்சேல் சிக்ஸர் அடிக்க முயற்சித்த போது கேட்ச்சாக மாறியது. அதை மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பின்னோக்கி சுமார் 19 மீட்டர்கள் ஓடி 5 நொடிகளில் டைவ் அடித்து அற்புதமாக பிடித்து அசத்தினார்.

- Advertisement -

சவாலில் இந்தியா வெல்லுமா:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாட முயற்சித்த கிளன் பிலிப்ஸை 26 (14) ரன்களில் போல்டாக்கிய அஸ்வின் மறுபுறம் அரை சதமடித்து சவாலை கொடுத்த வில் எங்கை 51 ரன்களில் அவுட்டாக்கினார். அடுத்து வந்த இஸ் சோதியை 8 ரன்களில் காலி செய்த ஜடேஜா மாட் ஹென்றியையும் 10 ரன்களில் போல்டாக்கினார்.

இதையும் படிங்க: இதுக்கா செலக்ட் பண்ணீங்க? சர்பராஸ் கானை வீணடித்த ரோஹித்தை விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கர், மதன் லால்

அப்போது நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் முடிவில் 171-9 ரன்களை எடுத்துள்ள நியூஸிலாந்து 143 ரன்கள் முன்னிலையாகப் பெற்றுள்ளது. எனவே எஞ்சிய 1 விக்கெட்டையும் விரைவில் எடுத்தால் இந்தியா குறைந்த இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு அதிக சவாலாக மாறிக்கொண்டே வருகிறது. எனவே 150 என்பது கூட சேசிங் செய்வதற்கு சவாலாக இருக்கும். அதை தொட்டு இந்தியா போட்டியை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement