4 ஜெர்ஸி நனைஞ்சுடுச்சு.. ரோஹித்தின் முடிவு பும்ராவுக்கும் எனக்கும் பிடிக்கலனாலும் இந்தியாவுக்காக செஞ்சோம்.. அஸ்வின்

R Ashwin 6
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்று இந்தியா அசத்தியுள்ளது. குறிப்பாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் 2, 3வது நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக அப்போட்டியின் நான்காவது நாளில் அதிரடியாக பேட்டிங் செய்த இந்தியா 34.4 ஓவரில் 258-9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில் 4வது நாள் உணவு இடைவெளி வரை பந்து வீசி விட்டு மீண்டும் மாலையில் பந்து வீசும் முடிவை கேப்டன் ரோஹித் சர்மா எடுத்ததாக அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் கான்பூரில் அதிகப்படியான வெப்பம் நிலவிய அந்த முடிவை தாமும் பும்ராவும் விரும்பவில்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் முடிவு:

இருப்பினும் முதல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ரோஹித் சிக்ஸரை பறக்க விட்டு இந்தியாவின் அதிரடியை துவங்கியதாக அஸ்வின் கூறியுள்ளார். அதை பார்த்து பவுலர்களான நாமும் நாட்டுக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று 2வது இன்னிங்ஸில் பந்து வீசி கடைசியில் வென்றதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நாம் இன்னிங்ஸை இழக்க வேண்டுமா என்று பேசினோம். ஏனெனில் வெப்பம் அதிகமாக இருந்ததால் அந்த முடிவு மிகவும் கடினமானதல்லவா? ஏற்கனவே என்னுடைய 4 ஜெர்ஸிகள் வியர்வையால் நனைந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசுவது மிகவும் கடினம். ஸ்பின்னர்களும் அடுத்தடுத்த ஓவர்களை வீசுவது மிகவும் கடினம். அதனால் முதலில் நாம் முழுமையாக பேட் செய்வோம் பந்து வீசலாம் என்று நினைத்தோம்”

- Advertisement -

அதிரடி ஆட்டம்:

“அதனால் நானும் பும்ராவும் ஒரே நாளில் மீண்டும் பந்து வீசுவதை விரும்பவில்லை. பொதுவாக ஒரு நாளில் பந்து வீசிய பின் குளிர்ச்சியான குளியல் எடுத்த பின்பே மீண்டும் பந்து வீச தயாராவோம். ஆனால் எங்கள் கேப்டன் களத்திற்கு சென்று முதல் பந்தில் கவனத்துடன் விளையாடாமல் சிக்சரை அடித்தார். எங்கள் கேப்டன் ரோகித் சர்மா அப்படி செய்யும் போது அதை பின்பற்றுவதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழியில்லை”

இதையும் படிங்க: ஆஸி, இங்கிலாந்து மாதிரி இந்த மூளையுடைய முடிவை எடுத்தா தப்பில்ல.. பிசிசிஐக்கு அஸ்வின் சூப்பர் ஆலோசனை

“அதுவே ரோகித் சர்மாவை பற்றி நிர்ணயிக்கக் கூடிய ஒரு புள்ளியாகும். பொதுவாக சொல்வது ஒன்று. அதை செய்து காட்டுவது மற்றொன்று. ஆனால் சொன்னதை செய்து காட்டுவது முற்றிலும் மாறுபட்டது” என்று கூறினார். அந்த வகையில் ரோகித் சர்மாவின் அதிரடியான அணுகு முறையால் இப்போட்டியில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement