- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுக்கு ரிஷப் பண்ட் ஸ்டைல் தான் கரெக்ட்.. ஜடேஜா ஹெல்ப் பண்ணாரு.. சென்னையில் அசத்திய அஸ்வின் பேட்டி

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சென்னையில் துவங்கியது. செப்டம்பர் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாளில் போராடி 339-6 ரன்கள் குவித்துள்ளது.

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 6, சுப்மன் கில் 0, விராட் கோலி 6 ரன்களில் அவுட்டானதால் 34-3 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறியது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 39, கேஎல் ராகுல் 16 ரன்களில் அவுட்டாகி சென்றனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 195* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து காப்பாற்றினர்.

- Advertisement -

ரிஷப் பண்ட் ஸ்டைல்:

அதில் சொந்த மண்ணில் சதமடித்த அஸ்வின் 102*, ஜடேஜா 86* ரன்கள் குவித்ததால் தப்பிய இந்தியா முதல் நாளில் நல்ல துவக்கத்தை பெற்றது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் போல கொஞ்சம் அதிரடியாக விளையாட 2024 டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங்கில் வேலை செய்ததாக அஸ்வின் கூறியுள்ளார். அத்துடன் கடினமான நேரங்களில் ஜடேஜா தமக்கு உதவியதைப் பற்றி அவர் முதல் நாள் முடிவில் பேசியது பின்வருமாறு.

“சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது எப்போதும் ஸ்பெஷல். இந்த மைதானத்தில் நான் முழுமையாக விளையாட விரும்புகிறேன். இது எனக்கு நிறைய அற்புதமான நினைவுகளை கொடுக்கிறது. சென்ற முறை இங்கே சதமடித்த போது ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தார். டிஎன்பிஎல் தொடரிலிருந்து வந்த நான் அங்கே கொஞ்சம் எனது பேட்டிங்கில் வேலை செய்தேன்”

- Advertisement -

ஜடேஜாவின் உதவி:

“இது போன்ற பிட்ச்சில் பந்தை நீங்கள் அடிக்க விரும்பினால் ரிஷப் பண்ட் போல அதிரடியாக விளையாட வேண்டும். பழைய சென்னை பிட்ச்சில் கொஞ்சம் வேகம் மற்றும் கேரி இருக்கும். செம்மண் பிட்ச் உங்களுடைய ஷாட்டுகளை விளையாட அனுமதிக்கும். அதற்கு நீங்கள் லைனில் இருந்து அகலம் கிடைக்கும் போது அடிக்க வேண்டும். ஜடேஜா எனக்கு உதவிகரமாக இருந்தார். நான் கொஞ்சம் சோர்வடைந்து வியர்வை சிந்தியதை கவனித்த அவர் என்னை வழிநடத்தினார்.

இதையும் படிங்க: 34/3 டூ 339/6.. வங்கதேசதிடம் ஜடேஜாவுடன் சேர்ந்து இந்தியாவை காப்பாற்றிய அஸ்வின்.. சச்சினை முந்தி சாதனை

“கடந்த சில வருடங்களில் ஜடேஜா எங்களுடைய சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். சிங்களை டபுள் ட்ரிபிளாக மாற்றுவதில் உதவிய அவர் தொடர்ந்து என்னை உத்வேகப்படுத்தினார்” என்று கூறினார். மேலும் சென்னை பிட்ச் போட்டியின் கடைசிப் பகுதியில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறலாம் என்று அஸ்வின் கூறினார். தற்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் பிட்ச்சில் நாளை புத்துணர்ச்சியுடன் ஆட்டத்தை துவங்க உள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -