இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 6, சுப்மன் கில் 0, விராட் கோலி 6 ரன்களில் ஹசன் மஹ்முத் வேகத்தில் ஆட்டமிழந்தனர்.
அதனால் 34-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணியை மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து காப்பாற்ற முயற்சித்தனர். அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ரிஷப் பண்ட் 39 ரன்களில் சுமாரான ஷாட்டை அடித்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
காப்பாற்றிய அஸ்வின் – ஜடேஜா:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் களமிறங்கி தடுமாற்றமாக விளையாடிய கேஎல் ராகுல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
மிகவும் அனுபவமிக்க அந்த ஜோடியில் ஆரம்பத்தில் இருவருமே நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த ஜோடியில் பிறந்து வளர்ந்த தம்முடைய சொந்த ஊரான சென்னையில் மிகவும் சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடிய அஸ்வின் முதல் ஆளாக அரை சதமடித்தார். அதே போல சிஎஸ்கே அணிக்காக சென்னையில் ஏராளமாக விளையாடி அனுபவத்தை கொண்ட ஜடேஜாவும் நங்கூரமாக பேட்டிங் செய்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து இந்தியாவை காப்பாற்றினார்.
சென்னையின் இந்திய ஹீரோ:
அந்த வகையில் நன்கு செட்டிலான அந்த ஜோடியில் நேரம் செல்ல செல்ல ஒருநாள் கிரிக்கெட்டைப் போல விளையாடி வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய அஸ்வின் 108 பந்துகளில் சதமடித்தார். அந்த வகையில் நாளில் கடைசி வரை அவுட்டாகாத அவர் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 102* (112) ரன்களும் ஜடேஜா 10 பவுண்டரி 2 சிக்சருடன் 86* (117) ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: பாவம்ங்க சுப்மன் கில்.. இதனால தான் அவுட்டானாரு.. ஒன்னும் சொல்லாதீங்க.. பார்திவ் படேல் பேட்டி
அவர்களுடைய அபார ஆட்டத்தால் முதல் நாள் முடிவில் 339-6 ரன்கள் குவித்துள்ள இந்தியா இப்போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. இப்போட்டியின் வாயிலாக அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையை உடைத்த அஸ்வின் புதிய சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விஜய் மெர்சண்ட்: 40 வருடம் 21 நாட்கள்
2. ராகுல் டிராவிட்: 38 வருடம் 307 நாட்கள்
3. வினோ மன்கட்: 38 வருடம் 249 நாட்கள்
4. ரவிச்சந்திரன் அஸ்வின்: 38 வருடம் 2 நாட்கள்
5. சச்சின் டெண்டுல்கர்: 37 வருடம் 253 நாட்கள்



