2023 உலக கோப்பையில் அஸ்வின் தேர்வு செய்யப்படுகிறாரா? தமிழக ரசிகர்களை மகிழ்விக்கும் ரிப்போர்ட் இதோ

Ravichandran Ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கி அடுத்ததாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்க உள்ளது. அதன் காரணமாக ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், சஹால் போன்ற வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இந்திய அணியில் இணைந்துள்ள நிலையில் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வீரர்களாக கருதப்படும் அஜிங்க்ய ரகானே, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

Ravichandran Ashwin.jpeg

- Advertisement -

அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஜாம்பவான் நட்சத்திர ரவிச்சந்திரன் அஸ்வின் 2023 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்பதால் இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை. கடந்த 2010இல் அறிமுகமாகி 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக ஜொலித்த அவர் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதே போல 2015 உலகக்கோப்பையிலும் விளையாடிய அவர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் ஓரிரு போட்டிகளில் சுமாராக செயல்பட்ட காரணத்தால் அத்துடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டார்.

உலகக்கோப்பையில் அஸ்வின்:
போதாக்குறைக்கு அதுவரை ஆதரவாக இருந்த தோனி பதவி விலகிய பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற கோணத்துடன் அஸ்வினை மொத்தமாக கழற்றி விட்டார். ஆனாலும் 2020 காலகட்டத்தில் குல்தீப் யாதவ் – சஹால் ஆகியோர் ஃபாரமின்றி தவித்த காரணத்தால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அசத்தி வந்த அவர் 3 வருடங்கள் கழித்து 2021 டி20 உலக கோப்பையில் நேரடியாக தேர்வானார்.

Ravichandran Ashwin

அதில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியதன் காரணமாக 2022 டி20 உலக கோப்பையிலும் தேர்வு செய்யப்பட்ட அவர் பேட்டிங்கில் சில முக்கிய ரன்களை எடுத்து வெற்றிகளின் பங்காற்றிய போதிலும் பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக தற்போது மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டுள்ள அவருக்கு 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இன்னும் நிலையான வாய்ப்பு கிடைக்காதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் 2023 உலக கோப்பையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது ஒருநாள் அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் என 4 ஸ்பின்னர்கள் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த நால்வரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இடது கை சுழல் பந்து வீச்சாளர்களாக இருக்கின்றனர்.

Ashwin

அதே போல சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் லெக் ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். அப்படி தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்களுமே ஒரே மாதிரியான சுழல் பந்து வீச்சாளர்களாக இருப்பதால் எதிரணிகளுக்கு சவாலை கொடுக்க ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை என்று இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது. அந்த சூழ்நிலையில் மற்றொரு தமிழக ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யலாம் என்று பார்த்தால் அவர் ஏற்கனவே 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதற்கான காரணம் என்னவெனில் பேட்டிங் துறையில் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு நிகராக யுவ்ராஜ் சிங், ரெய்னா, கம்பீர் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்த காரணத்தாலேயே 2011 உலகக் கோப்பையை வெல்ல முடிந்தது. அதே போலவே சுழல் பந்து வீச்சுத் துறையில் அனைவருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருப்பது பின்னடைவை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் எதிரணிக்கு சவாலை கொடுக்க ஒரு ஆஃப் ஸ்பின்னரும் இருப்பது அவசியமாகும்.

இதையும் படிங்க:IND vs WI : எத்தனை டைம் தான் உங்களுக்கு சொல்றது? விராட் கோலி பற்றி கேட்ட செய்தியாளருக்கு – ரோஹித் சர்மா கோபமான பதிலடி

அப்படிப்பட்ட சூழ்நிலையில் 113 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளை எடுத்துள்ள அனுபவிக்க அஸ்வினை உலகக்கோப்பை உத்தேச அணியில் தேர்வு செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement