கேட்ச் பிடிச்சிருந்தா தோத்துருப்பிங்க – ட்விட்டரில் வம்பிழுத்த இலங்கை நிரூபருக்கு அஷ்வின் கொடுத்த சவுக்கடி பதில் இதோ

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடிய இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் வெற்றியுடன் தக்க பதிலடி கொடுத்தது. அந்த வெற்றியால் 2023 ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்ட இந்தியா இந்த சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்து நாடு திரும்பியது. முன்னதாக தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் வெறும் 145 ரன்களை துரத்தும் போது விராட் கோலி, புஜாரா போன்ற டாப் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 74/7 என சரிந்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது.

அந்த சமயத்தில் பொறுப்புடன் நங்கூரமாக பேட்டிங் செய்து 8வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஷ்ரேயாஸ் ஐயர் 29* ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 42* ரன்களும் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்திடம் முதல் முறையாக சந்திக்க வேண்டிய அவமான தோல்வியிலிருந்து காப்பாற்றி வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய அஷ்வின் கடைசி நேரத்தில் 5 விக்கெட்டுகளை எடுத்து சவாலை கொடுத்த அதே மெஹதி ஹசன் வீசிய ஒரே ஓவரில் 16 ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்தது அனைவரது பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

ப்ளாக் பண்ணிட்டேன்:
மேலும் மொத்தமாக 54 ரன்கள் 6 விக்கெட்டுகளை எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். முன்னதாக இப்போட்டியில் வெறும் 1 ரன்னில் இருந்த போது அஸ்வின் கொடுத்த கேட்ச்சை ஷார்ட் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்த வங்கதேச வீரர் மோனிமுல் ஹைக் தவற விட்டார். அதை பயன்படுத்தி இந்தியாவை காப்பாற்றி ஆட்டநாயகன் விருதை வென்ற அஷ்வின் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதைப் பார்த்து வயிறு எறிந்த நிற்பாஸ் ரம்ஜான் எனும் இலங்கை பத்திரிகை நிருபர் “நீங்கள் இந்த கோப்பையை கேட்ச்சை கோட்டை விட்ட மோனிமுல் ஹைக் கையில் கொடுக்க வேண்டும். அவர் மட்டும் அதைப் பிடித்திருந்தால் இந்தியா நிச்சயமாக 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருக்கும்” என்று பதிலளித்து வேண்டுமென்றே வம்பிழுத்தார். அதை பார்த்த அஷ்வின் “ஓ நோ. நான் உங்களை ஏற்கனவே பிளாக் செய்து விட்டேன் என்று நினைக்கிறேன். ஓ மன்னிக்கவும் அது மற்றொருவர். அவரது பெயர் என்ன? ஆம் அவரது பெயர் டேனியல் அலெக்சாண்டர். இந்தியா மட்டும் விளையாடாமல் போனால் நீங்கள் இருவரும் என்ன செய்து கொண்டிருப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” என மாஸ் பதிலடி கொடுத்து வெறித்தனமாக சிரித்து கலாய்த்தார்.

- Advertisement -

அதாவது நிர்பாஸ் ரம்ஜான் போலவே இலங்கையைச் சேர்ந்த மற்றொரு பத்திரிகை நிருபர் டேனியல் அலெக்சாண்டர் என்பவர் எப்போதும் இந்தியாவையும் இந்திய வீரர்களையும் குறை சொல்வதையும் கிண்டலடிப்பதையும் வழக்கமாக வைத்திருப்பவர். குறிப்பாக பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை வேண்டுமென்றே ஒன்றுமில்லாத காரணங்களுக்காக கிண்டலடிப்பதை அவர்கள் வழக்கமாக வைத்துள்ள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவிடம் 36க்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டி20 உலக கோப்பையில் தோற்றதை பைத்தியங்கள் போல் அடிக்கடி பேசும் அவர்கள் இந்தியாவை கலாய்க்கிறேன் என்ற பெயரில் தங்களை தாங்களே பெருமை பேசிக்கொள்வார்கள். அதற்கு அவ்வப்போது தக்க பதிலடிகளை இந்திய ரசிகர்களும் பிரபலங்களும் கொடுத்து கொடுத்து ஓய்ந்து போய் விட்டார்கள்.

இதையும் படிங்கஅவரோட பேட்டிங் வேறலெவல்ல மாறிடுச்சு. நிச்சயம் அவர் ஆஸ்திரேலிய சீரியஸ்க்கு அவசியம் – முகமது கைப் கருத்து

அந்த நிலைமையில் தம்மையும் இந்தியாவையும் வம்பிழுத்த அந்த நபர்களில் ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்த அஷ்வின் இந்தியா மட்டும் கிரிக்கெட்டில் விளையாடாமல் போயிருந்தால் நீங்கள் வேலை வெட்டி இல்லாமல் இருந்திருப்பீர்கள் என்ற வகையில் சவுக்கடி பதில் கொடுத்தது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அத்துடன் 73 ரன்கள் குவித்த லிட்டன் தாஸ் கொடுத்த 4 கேட்ச்களை விராட் கோலி தவறவிடாமல் இருந்திருந்தால் வங்கதேசம் 100 ரன்களைக் கூடத் தொட்டி இருக்காது என்று இந்திய ரசிகர்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

Advertisement