அண்டர்ரேட்டட் பிளேயர்.. ஷிகர் தவான் தான் இந்தியா அந்த கோப்பையை ஜெய்க்க காரணம்.. அஸ்வின் பாராட்டு

Ashwin Dhawan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2010ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 3 விதமான கிரிக்கெட்டிலும் 269 போட்டிகளில் விளையாடி 24 சதங்கள் உட்பட 10867 ரன்கள் குவித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். மேலும் உலகிலேயே ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக பேட்டிங் சராசரியை (65.15) கொண்ட வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் டக் அவுட்டானாலும் சதமடித்தாலும் மீசையை முறுக்கி புன்னகையை வெளிப்படுத்துவார். அந்த வகையில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அவர் தற்போது 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

- Advertisement -

அஸ்வின் வாழ்த்து:

இந்நிலையில் ஷிகர் தவான் எப்போதுமே முகத்தில் புன்னகையை வைத்திருக்கக்கூடிய ஜாலியான மனிதர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். மேலும் 2013 ஐசிசி டிராபியை இந்தியா வெல்வதற்கு முழுக்க முழுக்க அவர் தான் காரணம் என்றும் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு.

“மிகவும் வேடிக்கையானவர். தனிப்பட்ட முறையில் அவர் எதையும் எடுத்துக் கொள்வதில்லை. தன்னை பற்றி கிண்டலாக சொன்னால் கூட அதை அவர் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒருவர். அது தான் அவரைப் பற்றிய சிறந்த தரம். நகைச்சுவை செய்யும் போது அவர் முதல் ஆளாக சிரிப்பார். சிறப்பான கேரியருக்காக மிகவும் வெல்டன் ஷிகர் தவான்”

- Advertisement -

மிஸ்டர் ஐசிசி:

“உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அவரைப் போன்ற நேர்மறையான நபர் எப்போதும் வாழ்க்கையை அனுபவிக்கிறார். அதே சமயம் அவர் மிகவும் புத்திசாலி. அவர் மிகவும் அண்டர்ரேட்டட் பிளேயர். விராட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரால் ஷிகர் அதிகமாக கண்டு கொள்ளப்படவில்லை. அவர் சில டாப் செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபி முழுவதுமாக ஷிகர் தவான் சாம்பியன்ஸ் ட்ராபி”

இதையும் படிங்க: அஸ்வின் சொல்றது கரெக்ட் தான்.. அதனால எத்தணை பேருக்கு சான்ஸ் கிடைக்குதுன்னு பாருங்க.. ஜஹீர் கான்

“ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 180+ ரன்கள் அடித்தது எனக்கு பிடித்த அவரின் சிறந்த இன்னிங்ஸ். அதே போல அவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கொண்டாடப்படாத ஹீரோ” என்று கூறினார். அவர் கூறுவது போல 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்த வீரராக தவான் சாதனை படைத்தார். அதனால் தங்க பேட் விருது வென்ற அவர் தொடர்நாயகன் விருதையும் வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement