லாஸ்ட் 5 வருஷத்துல அஷ்வினுக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததே இல்ல – இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட ஏமாற்றம்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது முதல் இன்னிங்சில் 396 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 253 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி சார்பாக பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் அடித்திருந்தது. ஏற்கனவே முதல் இன்னிங்சில் பெற்ற 143 ரன்கள் முன்னிலை மற்றும் நேற்றைய போட்டியின் மூலம் கிடைத்த 28 ரன்கள் என இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

அதனைத்தொடர்ந்து இன்று இந்திய அணி தற்போது மூன்றாம் நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு விக்கெட் கிடைக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக 97 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் இந்த போட்டியிலேயே 500 விக்கெட்டுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்சில் 12 ஓவர்களை வீசிய அஷ்வின் 61 ரன்களை விட்டுக் கொடுத்தார். மேலும் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை.

இதையும் படிங்க : போதும் நிறுத்துங்க.. இப்படி சொல்லியே அவரோட சோளிய முடிச்சுறாதீங்க.. கம்பீர் அதிரடி பேட்டி

அதுமட்டும் இன்றி நேற்றைய முதல் இன்னிங்சில் அவரால் ஒரு மெய்டன் ஓவர் கூட வீச முடியாமல் போனது அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். கடைசியாக அஸ்வின் 2019-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது தான் மெய்டன் ஓவர் வீசாமல் ரன்களை வழங்கியிருந்தார். அதன் பிறகு தற்போது ஐந்து ஆண்டுகள் கழித்து அவரால் ஒரு மெய்டன் கூட போட முடியாமல் போனது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement