இனிமேல் தோனி உட்பட யாருக்கும் பர்த்டே விஷ் பண்ண மாட்டேன் – அஸ்வின் அதிரடி கருத்து, காரணம் என்ன?

ashwin
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ஜூலை 7ஆம் தேதி தம்முடைய 42வது பிறந்தநாளை கொண்டாடினார். ராஞ்சி போன்ற பிரபலமில்லாத சிறிய ஊரில் பிறந்து நாட்டுக்காக விளையாடும் கனவுடன் ரயில்வே டிக்கெட் கலெக்டர் வேலையை விட்டு உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக விளையாட வெற்றிகளில் பங்காற்ற வேண்டும் என்ற இலக்கணத்தை உருவாக்கி நிரந்தர இடத்தை பிடித்தார்.

மேலும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007 டி20 உலக கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய சாம்பியன் பட்டங்களை வென்ற அவர் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக உலக சாதனை படைத்தார். மேலும் சரியான நேரத்தில் சீனியர் வீரர்களை கழற்றி விட்டு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இப்போதுள்ள வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்த அவர் இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்து 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

அஸ்வின் அதிரடி:
இருப்பினும் சுமாரான ஃபிட்னஸ் கடைபிடிக்கும் பல வீரர்களுக்கு மத்தியில் 41 வயதிலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் அட்டகாசமான கேப்டன்ஷிப் செய்து சிறப்பாக விளையாடிய அவர் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனை படைத்தார். அந்த வகையில் வரலாற்றின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் ஃபினிஷராகவும் ஏராளமான கோப்பைகளை வென்ற மகத்தான கேப்டனாகவும் போற்றப்படும் அவர் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

அதனாலேயே ஆந்திராவில் 77 உயர கட் அவுட் வைத்து ஏராளமான ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் நிறைய முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட் போல உயரே பறக்குமாறு சச்சின் உட்பட பல நட்சத்திர ஜாம்பவான் வீரர்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அந்த வரிசையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்து தெரிவிக்காத காரணத்தால் நிறைய ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

- Advertisement -

சொல்லப்போனால் வங்கதேச கேப்டன் தமீம் இக்பால் திடீரென ஓய்வு முடிவை அறிவித்து வாபஸ் பெற்றதை வியப்புடன் ரியாக்சன் கொடுத்து ட்வீட் போட்ட அவர் தோனி பற்றி எதுவுமே சொல்லவில்லை. அதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் 2011 உலக கோப்பைக்கு பின் ஹர்பஜன் சிங்கை கழற்றி விட்டு உங்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்த தோனியை மறந்து விடாதீர்கள் என்று அஷ்வினை டேக் செய்து விமர்சிக்க துவங்கினர். அந்த விமர்சனங்களை தாங்க முடியாத அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டால் தான் தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று அர்த்தமல்ல என இந்த சிறிய விஷயத்தில் விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

குறிப்பாக மொபைல் போனில் நேரடியாக அழைத்து நான் வாழ்த்தியிருப்பேன் என்று யாருமே நினைக்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அஸ்வின் இனிமேல் யாருக்கும் சமூகவலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“மிகச் சிறந்த மனிதருக்கு ஜூலை 7ஆம் தேதி வாழ்த்துக்களை தெரிவிக்காமல் மற்ற ட்வீட் போடுவது பேரழிவை நிரூபிக்கும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி பாய். இதுவே ட்விட்டரில் நான் யாருக்கும் தெரிவிக்கும் கடைசி பிறந்தநாள் வாழ்த்து. குறிப்பாக நான் அவர்களை நேரடியாக வாழ்த்துவேன் அல்லது ஃபோனில் அழைத்து வாழ்த்துவேன் என்று நம்புகிறேன். எனவே இந்த மறுப்பு கருத்து வதந்தி பரப்புபவர்களுக்கும் கதை எழுதுபவர்களுக்கும் பொருந்தக்கூடியது”. என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:TNPL 2023 : சரத்குமாரின் திண்டுக்கல் இம்பேக்டை உடைத்த கோவை, கை கொடுத்த சச்சின் – முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது எப்படி?

அப்படி பிறந்தநாளில் ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும் சாதாரணமாக மொபைல் ஃபோனை கையில் எடுக்காத இந்த வாழ்த்துக்களை எல்லாம் பார்த்திருப்பாரா என்பது கூட சந்தேகம் என்று சொல்லலாம். இதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு அஸ்வின் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement