அதுக்கு மதிப்பு கொடுக்கலைனா உங்க அதிரடி ஆட்டம் வேலைக்கு ஆகாது – இந்தியாவை எச்சரிக்கும் இங்கிலாந்துக்கு அஷ்வின் பதிலடி

- Advertisement -

ஜோ ரூட் தலைமையில் 2019 – 2021 வாக்கில் டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணிலேயே படுதோல்விளை சந்தித்து திண்டாடிய இங்கிலாந்துக்கு கடந்த வருடம் நியூசிலாந்தில் பிறந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் முன்னாள் நியூசிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். சாதாரணமாகவே அதிரடியாக விளையாடுவதை விரும்பக் கூடிய இவர்கள் தலைமை பொறுப்பை ஏற்ற பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகு முறையில் எதிரணிகளை அடித்து நொறுக்கும் ஆட்டத்தை பின்பற்ற துவங்கினர். அதனால் சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவை அசால்டாக தோற்கடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அந்த அணியின் புதிய யுக்தியை “பஸ்பால்” என்று இங்கிலாந்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கொண்டாட துவங்கினர்.

- Advertisement -

அந்த நிலைமையில் கடந்த வருடம் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா மிரட்டலான வெற்றி பெற்றது. அப்போது அனைத்து நேரங்களிலும் அதிரடியான அணுகுமுறை வேலைக்கு ஆகாது என்று கிண்டலடிக்கப்பட்ட இங்கிலாந்து அதற்காக சளைக்காமல் அடுத்த 2 போட்டிகளில் மீண்டும் அதிரடியாக செயல்பட்டு 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. இருப்பினும் வெளிநாடுகளில் இதே அணுகு முறையால் இங்கிலாந்து வெல்ல முடியுமா? என்ற மற்றுமொரு விமர்சனம் எழுந்தது.

அஷ்வின் பதிலடி:
அந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த டிசம்பரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலும் யாருமே எதிர்பாரா வகையில் முக்கிய நேரங்களில் டிக்ளர் செய்து அதிரடியாக செயல்பட்ட இங்கிலாந்து 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் வெற்றியை பெற்று வெளிநாட்டிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று நிரூபித்தது. அந்த வரிசையில் தற்போது டெஸ்ட் சாம்பியனாக திகழும் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு வரும் இங்கிலாந்து முதல் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2வது போட்டியிலும் வெற்றி பெறும் தருவாயில் விளையாடி வருகிறது.

hussain

மொத்தத்தில் சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் அதிரடி அணுகுமுறையால் அசாத்தியமான வெற்றிகளை அசால்டாக பெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி வருவதாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் மார்தட்டி வருகிறார்கள். அத்துடன் இதே வேகத்தில் கடந்த 10 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியாவை அடக்குவதற்கு இங்கிலாந்து அணியால் மட்டுமே முடியும் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்தின் அணுகுமுறை தரமான சுழல் பந்து வீச்சுக்கு கை கொடுக்கக்கூடிய பிட்ச்களில் வேலைக்கு ஆகாது என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் உலகில் எந்த நாட்டில் நடைபெற்றாலும் அந்த போட்டி நடைபெறும் பிட்ச்க்கு மரியாதை கொடுத்து விளையாடினால் பிட்ச் உங்களுக்கு மரியாதையை கொடுத்து வெற்றியையும் கொடுக்கும் என்று தெரிவிக்கும் அஷ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

Ashwin

“தற்போது நம்மிடம் பஸ்பால் எனப்படும் அணுகுமுறை உள்ளது. அதை பயன்படுத்தி இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக விளையாடி வருகிறது. அவர்கள் அந்த ஸ்டைலில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட சில பிட்ச்களில் ஒவ்வொரு பந்தையும் அட்டாக் செய்து அதிரடி காட்ட முயற்சிக்கும் போது நீங்கள் தடுமாறலாம். எனவே அந்த அணுகு முறையால் உங்களுக்கு நன்மையும் தீமையும் உள்ளது”

இதையும் படிங்க:என்னோட கரியர்லயே ரொம்ப மோசமான நேரம் அதுதான். நான் நிறைய அழுத்திருக்கேன் – இஷாந்த் சர்மா வெளிப்படை

“பொதுவாக சிலர் தடுப்பாட்டத்தை போட்டு மெதுவாக விளையாடுவதை விட 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி விடலாம் என்று சொல்வார்கள். ஆனால் நானாக இருந்தால் 140 ரன்கள் வரை எடுத்துச் செல்வேன். எனவே போட்டி நடைபெறும் போது தான் அவர்களது அணுகுமுறை வேலை செய்யுமா இல்லையா என்பதை நம்மால் அறிய முடியும். மேலும் சில நேரங்களில் நீங்கள் கால சூழ்நிலைகள் மற்றும் பிட்ச்க்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அப்படி பிட்ச்க்கு நீங்கள் மதிப்பு கொடுத்து அதற்கேற்றார் போல் விளையாடினால் அதுவும் உங்களுக்கு மதிப்பு கொடுக்கும். நீங்கள் பிட்ச்சை மதிக்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு நல்ல பலனை தரும்” என்று கூறினார்.

Advertisement