தோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த அஸ்வின்.. ஜடேஜாவை பாராட்டிய சச்சின், சேவாக், கங்குலி

Ashwin Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதில் முதல் நாள் முடிவில் 339-6 ரன்கள் குவித்துள்ள இந்தியா நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 6, விராட் கோலி 6, சுப்மன் கில் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். அதே போல ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 39, ராகுல் 16 ரன்களில் போராடி பெவிலியன் திரும்பினர். அதனால் 144-6 என தடுமாறிய இந்திய அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடினர்.

- Advertisement -

தோனிக்கு சமமாக:

குறிப்பாக 7வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் அஸ்வின் தம்முடைய சொந்த ஊரில் சதமடித்து 102* ரன்கள் குவித்துள்ளார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா தம்முடைய பங்கிற்கு 86* ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். அவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் முதல் நாளில் வங்கதேசத்தின் கையை ஓங்க விடாமல் இந்தியா நல்ல துவக்கத்தை பெற்றது.

முன்னதாக இப்போட்டியில் சதமடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியின் டெஸ்ட் சதங்கள் சாதனையை. சமன் செய்துள்ளார். கடந்த 2004 – 2014 வரை விளையாடிய தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்துள்ளார். மறுபுறம் பவுலிங் ஆல் ரவுண்டரான அஸ்வின் 2011 முதல் இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்து தோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

- Advertisement -

ஜாம்பவான்கள் வாழ்த்து:

அவருக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்து பின்வருமாறு. “விரக்தி முதல் ஆதிக்கம் வரை. அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆட்டங்கள் மீண்டும் ஒரு முறை போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த ஆல் ரவுண்ட் புத்திசாலித்தனம் விலைமதிப்பற்றது. சூப்பர் பார்ட்னர்ஷிப் பசங்களா” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 6க்கு 6.. 10 இன்னிங்ஸில் 768 ரன்ஸ்.. 89 வருட உலக சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. புதிய தனித்துவ சாதனை

அதே போல வீரேந்திர சேவாக் அந்த ஜோடியை பாராட்டியுள்ளது பின்வருமாறு. “அஸ்வின் மற்றும் ஜடேஜாவிடம் என்ன ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப். அஸ்வின் தனது 6வது சதத்தை பெற்றுள்ளது ஸ்பெஷல் சாதனை” என்று கூறியுள்ளார். ஜாம்பவான் சௌரவ் கங்குலி இது பற்றி ட்விட்டரில் “அஸ்வின் மற்றும் ஜடேஜாவிடம் உச்சகட்ட ஆர்டர் இன்னிங்ஸ்கள். ரன்கள் மட்டுமன்றி வங்கதேசத்தின் தரமான வேகப்பந்துவீச்சு கூட்டணிக்கு எதிராக அவர்களின் பேட்ஸ்மேன்ஷிப் உயர்தரம். அவர்கள் சமீபத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதில் ஆச்சரியமில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement