முதல்நாள் ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட்ட தமிழாகவீரர் அஷ்வின்.. எப்படி சாத்தியமானது? – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி இன்று ராஞ்சி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை குவித்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 106 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். அவருக்கு அடுத்து பென் போக்ஸ் 47 ரன்கள் குவித்தார். மேலும் ஒல்லி ராபின்சன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தமிழக வீரர் அஸ்வின் சில ஓவர்கள் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தொடர்ச்சியாக பீல்டிங் செய்த வேளையில் கலைப்பின் காரணமாக ஒரு சில ஓவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அணியில் துணை கேப்டன் பும்ராவும் இந்த போட்டியில் விளையாடாததன் காரணமாக அனுபவ வீரர் என்கிற அடிப்படையில் அஸ்வின் சில ஓவர்கள் கேப்டன்சி செய்தார்.

- Advertisement -

இந்த போட்டியை பொறுத்தவரை துணை கேப்டன் யார்? என்று அறிவிக்கப்படாத வேளையில் சீனியர் வீரரான அஸ்வினே துணை கேப்டனாக இருந்து சில ஓவர்கள் கேப்டன்சி செய்துள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வினுக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் என்று பேசப்பட்டு வந்தது.

இதையும் படிங்க : நோபால் வேற.. கடைசி மேட்ச் மாதிரி நினச்சேன்.. பும்ரா அந்த ஆலோசனை கொடுத்தாரு.. ஆகாஷ் தீப் பேட்டி

இவ்வேளையில் இன்றைய ஆட்டத்தில் அவர் ஒரு சில ஓவர்களில் கேப்டன் தற்காலிக கேப்டனாக செயல்பட்டதை பார்க்க முடிந்தது. இருப்பினும் அவர் கேப்டன்சி செய்த ஓவர்களில் பெரிய அளவில் எந்த ஒரு நிகழ்வும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement