- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறும் அஷ்வின்.. தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் – என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் வரை ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருந்தார். அதன் பின்னர் பல அணிகளுக்கு இடம் மாறியிருந்த அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் சில சீசன்களில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் ராஜஸ்தான், டெல்லி என பல்வேறு அணிகளுக்கு இடம் பெயர்ந்திருந்த அவர் மீண்டும் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு திரும்பியிருந்தார்.

சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறும் அஷ்வின் :

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது அனுபவ வீரரான அவரை சிஎஸ்கே அணியானது 9 கோடியே 75 லட்சம் என்கிற பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான செயல்பாடு வெளிப்படவில்லை. இதன் காரணமாக சிஎஸ்கே அணி அவரை சில போட்டிகளில் விளையாட வைக்காமல் வெளியிலும் அமர்த்தி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது அஸ்வினும் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அஸ்வின் அடுத்த ஆண்டு மினி ஏலத்தில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. மினி ஏலத்திற்கு முன்னதாக டிரேடிங் முறையும் நடைமுறையில் இருப்பதால் ஒருவேளை மற்ற அணிகளுக்காக அவர் டிரேடிங் செய்யப்படலாம். அப்படி டிரேடிங் ஆகாத பட்சத்தில் அவர் மினி ஏலத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இப்படி சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற இருப்பது ரசிகர்கள் மத்தயில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் அஸ்வின் இப்படி சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேற முடிவுசெய்ய காரணம் யாதெனில் : சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் முகமது ஆகியோரே முதன்மையான சுழற்பந்து வீச்சாளராக விளையாடுவார்கள் என்பதனால் போதிய அளவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதனாலே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் முதல் வீரராக இமாலய சாதனையை நிகழ்த்திய ரஷீத் கான் – விவரம் இதோ

ஒருவேளை அவர் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறினால் வேறொரு அணியில் முதன்மை வீரராக விளையாடுவார் என்பதனாலே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 221 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -