சிட்னி – மேற்கு மாம்பலத்துல மீட்டிங் வெச்சுக்கலாம்.. நேதன் அழைப்பை ஏற்ற அஸ்வின்.. நெகிழ்ச்சி பதிவு

Ashwin and Lyon
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெற உள்ளது. இத்தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் 1995க்குப்பின் கடந்த 28 வருடங்களாக சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோற்காமல் இருந்து வருகிறது. அந்த நிலையில் இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் நேத்தன் லயன் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி பாராட்டி பேசியிருந்தார்.

- Advertisement -

அழைப்பை ஏற்ற அஸ்வின்:
குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த பவுலராக உருவெடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை ஆரம்பத்திலிருந்தே உன்னிப்பாக கவனித்து வருவதாக நேதன் லயன் தெரிவித்தார். அதை விட தம்மை அறியாமலேயே அஸ்வினை பார்த்து நிறையவற்றை கற்று வருவதால் அவர் தம்முடைய பயிற்சியாளர்களில் ஒருவராக இருப்பதாகவும் நேதன் லயன் வெளிப்படையாக கூறியிருந்தார்.

மேலும் விரைவில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை உடைக்க போகும் தங்களில் யார் கேரியரின் முடிவில் அதிக விக்கெட்கள் எடுப்பார்கள் என்பதை பார்க்க உள்ளதாகவும் லயன் தெரிவித்திருந்தார். அத்துடன் ஓய்வுக்கு பின் நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திக் கொண்டே எதிரெதிர் அணிகளில் விளையாடிய காலங்களை பற்றி மகிழ்ச்சியுடன் பேச விரும்புவதாகவும் நேதன் லயன் அன்பாக கூறியிருந்தார்.

- Advertisement -

அவருடைய அந்த பேட்டி இந்தியா டுடே இணையத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதை ட்விட்டரில் பார்த்த நேத்தன் லயன் மீண்டும் “ஓய்வுக்கு பின் ஒன்றாக அமர்ந்து பேசக்கூடிய இடத்தை தேர்வு செய்வதில் எங்களுக்கிடையே வலுவான போட்டி இருக்கும் என்பதை உறுதியாக சொல்வேன். அதற்கு முன்பாக எங்களுக்கு கிரிக்கெட்டில் இன்னும் சில நல்ல வருடங்கள் இருக்கிறது” என்று அஸ்வினை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அந்த ஷூவை இனிமே நீங்க போடக்கூடாது.. ஆஸ்திரேலிய வீரருக்கு ஐ.சி.சி போட்ட கண்டிஷன் – காரணம் என்ன?

தற்போது அந்த பதிவை பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் அவரின் அழைப்பை ஏற்று உங்கள் ஊரிலும் எங்கள் ஊரிலும் மீட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று லயனுக்கு பதிலடித்துள்ளது பின்வருமாறு. “நாம் சொந்த ஊரிலும் வெளியூரிலும் பார்த்துக் கொள்வோம். சிட்னி உங்களுடைய தேர்வு. சென்னையில் மேற்கு மாம்பலம் என்னுடைய தேர்வு. நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுங்கள். விரைவில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார். மொத்தத்தில் நவீன கிரிகெட்டில் மகத்தான ஜாம்பவான் ஸ்பின்னர்களாக விளையாடி வரும் இவர்கள் இப்படி நண்பர்களாக இருப்பது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement