அந்த ஷூவை இனிமே நீங்க போடக்கூடாது.. ஆஸ்திரேலிய வீரருக்கு ஐ.சி.சி போட்ட கண்டிஷன் – காரணம் என்ன?

Khawaja
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை டிசம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த அணியில் நட்சத்திர துவக்க வீரரான உஸ்மான் கவாஜாவும் இடம்பெற்று பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பயிற்சியின் போது உஸ்மான் கவாஜா அணிந்திருந்த ஷூ தற்போது பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் அவர் அணிந்திருக்கும் ஷூவில் எழுதப்பட்ட சில வசனங்கள் ஐசிசி விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாக அவர்கள் உஸ்மான் கவாஜாவை கண்டித்துள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் கவாஜாவின் ஷூவில் எழுதப்பட்ட வார்த்தைகளாவது : “ஆல் லிவ்ஸ் ஆர் ஈக்வல்” அதாவது “உலகில் வாழும் அனைவருமே சமமானவர்கள்” என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.

இது போன்ற எந்த பொதுவான வசனங்களோ அல்லது அரசியல் குறித்த பதிவையோ வீரர்கள் தங்களது உடைமைகளில் எழுதி இருக்கக் கூடாது என்பதனால் அந்த ஷூவை பயன்படுத்தக்கூடாது என ஐசிசி தரப்பில் அவருக்கு கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிலளித்த உஸ்மான் கவாஜா கூறுகையில் : “அனைத்து உயிர்களும் சரிசமம்” என்று நான் எழுதியிருந்ததில் எந்த தவறும் இல்லை. இந்த வாசகத்தில் எந்த அரசியலும் இருப்பதாக எனக்கு தர தெரியவில்லை. நான் எந்த தரப்பின் பக்கமும் இருக்கவில்லை. என்னை பொறுத்தவரை அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் சமம் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

இதையும் படிங்க : 309/5 டூ 319 ஆல் அவுட்.. ஹாட்ரிக் எடுத்த பிரசித் கிருஷ்ணா அபார சாதனை.. தமிழக வீரர் அசத்தல் சதம்

இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை என வெளிப்படையான கருத்தினை பகிர்ந்துள்ளார். இதேபோன்று கடந்த நவம்பர் 26-ஆம் தேதி கராச்சியில் நடைபெற்ற டி20 தொடர் ஒன்றில் கராச்சி அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசாம் கான் பாலஸ்தீன கொடியை தனது பேட்டில் பயன்படுத்தியிருந்தார். அதனை கவனித்த ஐசிசி ஆடை மற்றும் உபகரண விதிகளை மீறியதற்காக அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement