வெளிநாட்டில் இந்திய வீரர்களுக்கு தப்பான பழக்கம் இருக்கு.. ஆனா ஜடேஜா அப்படி இல்லை.. ரவிபா சர்ச்சை பேட்டி

raviba jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா நல்ல ஆல் ரவுண்டராக அறியப்படுகிறார். 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்ற அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். அவருடைய மனைவி ரவிபா அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

குறிப்பாக குஜராத்தில் உள்ள ஜாம்நகர் வடக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் பிஜேபி கட்சிக்காக அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரவிபா சொன்ன கருத்து சர்ச்சையாகியுள்ளது. அதாவது இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும் போது அனைத்து வீரர்களும் மாதக் கணக்கில் தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்து விளையாடுவார்கள்.

- Advertisement -

தவறான பழக்கம்:

அப்போது நிறைய இந்திய வீரர்கள் தீய பழக்கங்களில் ஈடுபடுவதாக ரவிபா தெரிவித்துள்ளார். ஆனால் தம்முடைய கணவர் ரவீந்திர ஜடேஜா குடும்பம், சமூகம் ஆகியவற்றின் பொறுப்பை உணர்ந்து தீய பழக்கங்களில் ஈடுபட்டதில்லை என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி வைரலாகி வரும் வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு.

“என்னுடைய கணவர் கிரிக்கெட்டர் ரவீந்திர ஜடேஜா லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற பல வெளிநாடுகளுக்கு சென்று கிரிக்கெட்டில் விளையாடுவார். இன்று வரை அவர் எந்த வகையான போதை அல்லது தீய பழக்கத்தையும் தொடவில்லை, ஈடுபட்டதும் இல்லை. ஏனெனில் அவர் தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்துள்ளார்”

- Advertisement -

உத்தமர் ஜடேஜா:

“இருப்பினும் அணியில் இருக்கும் மற்றவர்கள் தீய பழக்கங்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் மேலே அவர்களுடைய குடும்பம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. ஒருமுறை நாம் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் பணிவுடன் நம்முடைய கலாச்சாரத்தின் வேர்களை நினைவுப்படுத்தி வாழ்வது முக்கியம். என்னுடைய கணவர் 12 வருடங்களுக்கும் மேல் வீட்டுக்கு வெளியே இருக்கிறார்”

“அதனால் தாம் விரும்பும் விஷயங்களை அவரால் செய்ய முடியும். ஆனால் ஒழுக்கத்தைப் புரிந்துகொண்ட அவர் தன்னுடையக் கடமையை மட்டுமே செய்து வருகிறார்” என்று கூறினார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் அப்படியானால் மற்ற இந்திய வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தவறான பழக்கத்தில் ஈடுபடுகிறார்களா? என்ற கேள்வி எழுப்புகிறார்கள்.

இதையும் படிங்க: 183 ஸ்ட்ரைக் ரேட்டில் 3.. தகுதியற்ற கில்லுக்காக சாம்சனை பெஞ்சில் பார்ப்பது வலிக்குது.. பத்ரிநாத் விமர்சனம்

சொல்லப்போனால் 2016 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேஎல் ராகுல் மது பாட்டில்களுடன் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது சர்ச்சையானது. பல குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் இந்திய வீரர்கள் அப்படி பதிவிடக்கூடாது என்று சர்ச்சைகள் எழுந்தன. அதனால் ராகுல் அந்தப் பதிவுகளை நீக்கினார். 2024இல் இந்திய வீரர்கள் போதைப் பொருட்களுக்கு விளம்பரம் செய்ய பிசிசிஐ தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement