- Advertisement -
உலக கிரிக்கெட்

கவனமா இருங்க.. இல்லன்னா முடிவு மாறிடும்.. தென்னாப்பிரிக்க அணியை எச்சரித்த – ரவி சாஸ்திரி

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே இன்று மார்ச் 4-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியை எச்சரித்த : ரவி சாஸ்திரி

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இரு போட்டிகளுமே சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதனால் இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியையே சந்திக்காமல் பலமான அணியாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதே வேளையில் நியூசிலாந்து அணியும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் இந்த ஆட்டம் யார் பக்கம் வேண்டும் என்றாலும் செல்லலாம் என்கிற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அவர்கள் மிகவும் சவாலான போட்டியை அளிப்பார்கள் என்றும் தென்னாப்பிரிக்க அணியை எச்சரிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நாம் தான் முன்னிலையில் இருக்கிறோம் என்று தென்னாப்பிரிக்கா நினைத்தால் நியூஸிலாந்து அணி அதனை மாற்றக்கூடிய அணியாக இருப்பார்கள். ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் கூட அது தென்னாப்பிரிக்க அணிக்கு ஆபத்தாக முடிந்து விடலாம். ஏனெனில் நியூசிலாந்து வீரர்கள் எப்போதுமே போட்டியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : இதுக்காகதான் காத்துகிட்டு இருக்கோம்.. இந்திய அணிக்கெதிரான போட்டிக்கு முன் – ஹாரி புரூக் பேட்டி

சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர்கள் எப்பொழுதுமே நெருக்கடியை தரும் அணிகளில் ஒன்றாக இருக்கிறார்கள். எனவே தென்னாப்பிரிக்க அணி சற்று தடுமாறினாலும் அந்த இடைவெளியில் நியூசிலாந்து அணி அவர்களை வீழ்த்த வாய்ப்புள்ளது. எனவே தென்னாப்பிரிக்க அணி முழு கவனத்துடன் விளையாட வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -