இதுக்காகதான் காத்துகிட்டு இருக்கோம்.. இந்திய அணிக்கெதிரான போட்டிக்கு முன் – ஹாரி புரூக் பேட்டி

Harry Brook
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்று போட்டிகளுக்கான வாய்ப்பினை இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பெற்றுள்ளன. இந்த தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று மார்ச் 4-ம் தேதி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.

இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பேசிய : ஹாரி புரூக்

அதனை தொடர்ந்து நாளை மார்ச் 5-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோத இருக்கின்றன. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறப்போகும் இரண்டு அணிகள் எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

மார்ச் 5-ஆம் தேதியான நாளை நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாட இருக்கும் இங்கிலாந்து அணி எவ்வாறு தயாராகி வருகிறது? என்பது குறித்து இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நாங்கள் அனைவருமே இந்த அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்காக உற்சாகமாக இருக்கிறோம்.

இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்த்து காத்திருந்தோம். அந்த வகையில் மிகப்பெரிய அரையிறுதி போட்டியில் நாங்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறோம். இந்தியாவிற்கு சாதகமாக ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இருப்பினும் எங்களால் முடிந்த சிறந்த கிரிக்கெட்டை விளையாடி முடியும் என்று நம்புகிறேன் என்று ஹாரி புரூக் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து அரையிறுதி போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? – மைக்கல் வாகன் கணிப்பு

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த தொடரில் ஜோஷ் பட்லரை தனியாக விட்டு விடுங்கள். அவர் சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் மீண்டும் பார்மிற்கு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன். எங்கள் அணியில் டாப் ஏழு வீரர்கள் மிகத் திறமையான வீரர்கள் என்பதினால் நிச்சயம் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்றும் ஹாரி புரூக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement