கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அந்த வகையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறயிருக்கிறது.
அரையிறுதியில் வெற்றிபெறப்போவது யார்? : மைக்கல் வாகன்
அதன்பின்னர் இரண்டாவது அரையிறுதி போட்டியானது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகவும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போதைய இந்திய அணியை விட இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு தாக்குதல் சிறப்பாக உள்ளது என்று நினைக்கிறேன்.
வருண் சக்கரவர்த்தி எப்படி பந்து வீசுகிறார்? என்று அனைத்து பேட்ஸ்மேன்களும் கண்டுபிடித்து விட்டனர். எங்கள் அணியிலும் டாவ்சன், ரஷீத், வில் ஜேக்ஸ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதோடு இங்கிலாந்து அணியின் பீல்டிங்கும் இந்த தொடரில் பிரமாதமாக இருந்து வருகிறது. மேலும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்திய அணிக்கு சமபலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து அணி இருக்கிறது.
இதையும் படிங்க : அரையிறுதியில் அசத்தப்போகும் இந்திய வீரர் இவர்தான்.. ஏதோ ஒன்று அவரிடம் இருக்கு – பாண்டிங் கணிப்பு
என்னை பொறுத்தவரை கடைசியாக இங்கிலாந்து விளையாடிய மூன்று சூப்பர் 8 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். எனவே அவர்கள் வெற்றி பெறும் வழியை கண்டுபிடித்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்திய அணியை வீழ்த்தி அவர்களே இறுதி போட்டிக்கு முன்னேறுவார்கள் என்றும் மைக்கல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.



