அரையிறுதியில் அசத்தப்போகும் இந்திய வீரர் இவர்தான்.. ஏதோ ஒன்று அவரிடம் இருக்கு – பாண்டிங் கணிப்பு

Ponting and Abhishek
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து மார்ச் 5-ஆம் தேதியான நாளை இரண்டாவது அரையிறுதி போட்டியானது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் விளையாட காத்திருக்கின்றன.

அரையிறுதியில் அசத்தப்போகும் இந்திய வீரர் : ரிக்கி பாண்டிங்

நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்றுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர்களே இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று பலரும் பேசி வருகின்றனர். இந்திய அணி சாம்பியன் பட்டத்திற்கு வெல்வதற்கு முன்னதாக அரையிறுதி போட்டி முக்கியம் என்பதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கவனமுடன் விளையாடி இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதோடு இந்த அரையிறுதி போட்டியில் அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர் யார்? அதிக விக்கெட்டுகளை எடுக்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கணிப்புகளையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் குவிக்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக அபிஷேக் சர்மாதான் இருப்பார் என்று கணித்தேன். அந்த கணிப்பு பலிக்காவிட்டாலும் இப்போதும் அபிஷேக் சர்மாவிற்கு ஆதரவாக தான் நான் இருக்கிறேன். ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அரையிறுதி போட்டிக்காக ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அவருக்கு கடந்த சில வாரங்களாகவே மோசமான கட்டம் இருக்கலாம். ஆனால் அதனை அவர் நிச்சயம் தாண்டி வருவார். தற்போது அவர் பேட்டிங் பயிற்சி செய்யாமல் பீல்டிங் மற்றும் பௌலிங் பயிற்சியை செய்து நிதானமாக இருந்தால் மனசோர்வை தடுக்கலாம். ஒரு சில வீரர்களுக்கு இதுபோன்ற மோசமான காலகட்டம் பொதுவாகவே இருக்கும்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வெளியான செய்தி.. சின்னசாமி மைதானத்தில் – நடக்கப்போகும் கொண்டாட்டம்

எனவே அந்த நேரத்தில் பேட்டிங் பயிற்சி நிறுத்திவிட்டு சாதாரண இயல்பான பயிற்சிகளை செய்தால் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்து போட்டிகளில் சிறப்பாக செயல்படலாம் என்றும் அபிஷேக் சர்மாவிற்கு ஆதரவாக ரிக்கி பாண்டிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement