இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது பயணத்தை தோல்விகரமாக துவங்கியது.
இதற்கு முன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரிய ரன்களை குவித்திராத சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு சில முன்னாள் வீரர்கள் விமர்சனம் தெரிவித்திருந்தனர். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்தார். அத்துடன் முதல் போட்டியில் 7 கேட்ச்கள் தவற விட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.
தோத்தாலும் பரவால்ல:
இல்லையென்றால் அவருடைய தலைமையில் முதல் போட்டியிலேயே இந்தியா வெற்றியைப் பெற்றிருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஒருவேளை இங்கிலாந்து தொடரில் தோல்வியை சந்தித்தாலும் சும்மன் கில்லை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கக்கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். இங்கிருந்து அவருக்கு 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடியும் வரை குறைந்தது 3 வருடங்கள் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சாஸ்திரி கூறியுள்ளார்.
அப்படி தொடர்ச்சியான வாய்ப்புகளைக் கொடுத்தால் சுப்மன் கில் நிச்சயம் முன்னேறி இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் என்று தெரிவிக்கும் சாஸ்திரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில்லுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் நான் ஏமாற்றமடைவேன். தளர்வான சோம்பேறித்தனமான நேர்த்தியைக் கொண்டுள்ள அவர் பேட்டிங் செய்யும் போது ராஜாங்கம் செய்யும் அம்சத்தைப் பெற்றிருக்கிறார்”
சாஸ்திரி கருத்து:
“சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் முறையை கற்றுக்கொள்ள முடிந்தால் அவருடைய பெயரும் பெரிதாக வருவதைப் பார்க்க முடியும். தற்போது நிறைய முதிர்ச்சியைப் பெற்றுள்ள அவர் ஊடகங்களை சிறப்பாக கையாண்டு டாஸ் வீசும் போதும் நன்றாக பேசுகிறார். அவரை 3 வருடங்கள் கேப்டனாக இருக்க விடுங்கள்”
இதையும் படிங்க: எது கேட்டாலும் கிடைக்குது.. அப்போ ரிசல்ட்டை சரியா கொடுக்கனும் இல்ல.. கவுதம் கம்பீர் பற்றி – ஆகாஷ் சோப்ரா பேச்சு
“இந்தத் தொடரில் எது நடந்தாலும் தேவையின்றி மாற்றங்கள் செய்யாதீர்கள். அவருடன் 3 வருடம் தொடர்ந்து விளையாடுங்கள். அதைச் செய்தால் அவரால் தொடர் வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து 2வது ஜூலை 22ஆம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.



