எது கேட்டாலும் கிடைக்குது.. அப்போ ரிசல்ட்டை சரியா கொடுக்கனும் இல்ல.. கவுதம் கம்பீர் பற்றி – ஆகாஷ் சோப்ரா பேச்சு

Aakash Chopra
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் அந்த பதவியில் இருந்து வெளியேறினார். அதற்கு அடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் மும்பரம் காட்டிய பிசிசிஐ முன்னாள் வீரரான கௌதம் கம்பீரை புதிய பயிற்சியாளராக நியமித்தது.

டெஸ்ட் போட்டிகளில் சரியான முடிவுகள் வேண்டும் : ஆகாஷ் சோப்ரா

கம்பீரின் ஆலோசனைக்கு கீழ் கொல்கத்தா அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதால் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணியின் நிர்வாகம் அந்த பதவியை வழங்கியது. அதோடு கம்பீரின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு சாதகமான பயிற்சியாளர் குழுவையும், நிர்வாகிகளையும் அணியில் இணைக்க அனுமதித்தது.

- Advertisement -

இப்படி பல சிறப்பு சலுகையுடன் இந்திய அணிக்கு கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை தொடர்ச்சியான தோல்விகளையே சந்தித்து வருகிறது. கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரினை வென்றாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தோல்வி என அடுத்தடுத்த டெஸ்ட் தோல்விகளை சந்தித்த இந்திய அணி தற்போது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடரான இங்கிலாந்து தொடரிலும் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த விவரங்கள் எல்லாம் சுட்டிக்காட்டிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கௌதம் கம்பீர் குறித்து பேசுகையில் கூறியதாவது :

- Advertisement -

கம்பீருக்கு தேவையான அனைத்தையும் இந்திய அணியின் நிர்வாகம் வழங்குகிறது. அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது விருப்பத்திற்கு ஏற்ப அனைத்து வகையான சலுகைகளும் அவருக்கு கிடைக்கும் போது அவர் முடிவுகளை சரியாக வழங்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : 97 ரன்ஸ்.. ஆஸியை முந்திய இந்தியா.. இங்கிலாந்திடம் உலக சாதனை வெற்றி.. ஷபாலி – மந்தனா உலக சாதனை

ஆனால் இனிவரும் நாட்களில் இந்த முடிவுகளை மாற்றி இந்திய அணி வெற்றி பெறும் வகையில் விளையாட வேண்டும். பயிற்சியாளராக கம்பீர் இன்னும் அணியை வலுப்படுத்த வேண்டும் அதுதான் அவருடைய பணி என கௌதம் கம்பீர் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement