தோனியின் இடத்தில் தமிழக வீரரான இவரை விளையாட வையுங்கள். சரியாக இருக்கும் – ரவி சாஸ்திரி கருத்து

Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பினிஷராக விளங்கியது நாம் அறிந்ததே. இந்திய அணிக்காக எண்ணற்ற போட்டிகளில் அவர் இறுதிநேரத்தில் களமிறங்கி அணியை வெற்றிகரமாக அழைத்துச் சென்றுள்ளார். அவருக்கு பிறகு இந்திய அணியில் பினிஷிங் செய்து கொடுக்கும் வீரர்கள் இதுவரை நிலை இல்லாமல் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நடைபெற்று முடிந்த 15வது ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக களம் இறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.

Karthik

- Advertisement -

பெங்களூரு அணிக்காக ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் களம் இறங்கி 16 போட்டிகளில் 330 ரன்கள் குவித்து தான் ஒரு நல்ல பினிஷர் என்று தன்னை நிலை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் தோனியின் இடத்தை நிரப்ப சரியான வீரர் தினேஷ் கார்த்திக் தான் என்று ரவி சாஸ்திரி தற்போது தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று யாராவது கூறினால் அதற்கு நான் முழுமனதோடு ஆதரவினை தெரிவிக்கிறேன். ஏனெனில் தற்போது அணியின் தேவை என்பது பினிஷர் ரோல் என்பதுதான்.

karthik

அதற்கு முன்னுரிமை கொடுத்தால் நிச்சயம் நான் தினேஷ் கார்த்திக்கின் பெயரைத்தான் முதலில் பரிந்துரைப்பேன். ஏனெனில் தோனி இல்லாததால் தற்போது இந்திய அணியில் பினிஷர் பற்றாக்குறை இருந்து வருகிறது. நமது அணியின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டுமென்றால் டாப் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் பலர் நம்மிடம் உள்ளனர்.

- Advertisement -

ஆனால் பினிஷிங் ரோலில் களமிறங்க வேண்டிய வீரர் நம்மிடம் இல்லை. எனவே நிச்சயம் தினேஷ் கார்த்திக்கை விக்கெட் கீப்பராக பார்க்காமல் அவரை ஒரு பினிஷராக பார்த்தால் கண்டிப்பாக அணியில் அவரை இணைக்கலாம். உலக கோப்பை தொடரில் அவர் பின்வரிசையில் விளையாடினால் நிச்சயம் அவரது அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 சீசனில் முதல் கோப்பையை டெல்லி வெல்வதற்க்கு – நீக்கவேண்டிய வீரர்களின் பட்டியல் இதோ

எனவே தோனியின் இடத்தை தற்போது நிரப்ப தினேஷ் கார்த்திக் சரியான ஒரு வீரர் என்றும் அவரால் இறுதி நேரத்தில் போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடியும் என்றும் ரவிசாஸ்திரி தனது ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement