ஐபிஎல் 2023 சீசனில் முதல் கோப்பையை டெல்லி வெல்வதற்க்கு – நீக்கவேண்டிய வீரர்களின் பட்டியல் இதோ

Kane Williamson DC vs SRH
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்று களமிறங்கிய ரிசப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அதற்கேற்றாற்போல் செயல்படாமல் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. 2008 முதல் அதிக அளவு தோல்விகளை சந்தித்த ஒரு அணியாக வலம்வரும் டெல்லி 2019இல் பெயரையும் உடையையும் மாற்றி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்கி பிளே ஆஃப் சுற்று வரை சென்ற நிலையில் 2020இல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இருப்பினும் காயத்தால் வெளியேறிய ஷ்ரேயஸ் ஐயருக்கு அதோடு டாட்டா காட்டி அந்த அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை கேப்டனாக நியமித்து தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

KKR vs DC

அதில் கடந்த வருடம் பிளே-ஆப் சுற்றுக்கு சென்று அந்த அணி இந்த முறை அந்த உச்சத்தையும் தொட முடியாமல் ஏமாற்றமடைந்தது. அதிலும் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற தடுமாறிய அந்த அணி கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலைமையில் மும்பையிடம் தோல்வியடைந்து வரலாற்றில் 15-ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை நிஜமாக்க தவறியது.

- Advertisement -

இந்த வருடம் ரிஷப் பண்ட் உட்பட முக்கிய வீரர்கள் கூட தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதே தோல்வியை பரிசளித்தது. எனவே அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்கு இந்த சீசனில் சுமாராக செயல்பட்டு ஏமாற்றியதால் நீக்கப்பட வேண்டிய வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

1. மந்தீப் சிங்: வரலாற்றில் பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டு வரும் இவர் இந்த வருடம் பிரித்வி ஷா காய்ச்சலால் விலகியதால் அளிக்கப்பட்ட 3 போட்டிகளில் 2 டக் அவுட் உட்பட வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

மேலும் கடந்த 2010 முதல் விளையாடி வரும் இவர் இதுவரை 95 இன்னிங்ஸ்சில் 6 அரைசதங்கள் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்டு வருவதால் அடுத்த வருடம் விடுவித்து வேறு வீரரை வாங்கலாம்.

nortje

2. அன்றிச் நோர்ட்ஜெ: கடந்த வருடம் 8 போட்டிகளில் 12 விக்கெட்களை 6.16 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்ததால் ரபாடாவை கூட தக்கவைக்காமல் இவரை டெல்லி நிர்வாகம் தக்கவைத்தது.

- Advertisement -

இருப்பினும் காயத்தால் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்காத இவர் 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்தாலும் 9.72 என்ற எகனாமியில் ரன்களை வாரி வழங்கி இந்த வருடம் சுமாராக செயல்பட்டார். இன்னும் முழுமையாக காயத்திலிருந்து வெளிவராத இவரை அடுத்த வருடம் விடுவித்து வேறு தரமான பவுலரை வாங்க முயற்சிக்கலாம்.

Sarfaraz

3. சர்ப்ராஸ் கான்: பிரிதிவி ஷா இல்லாத நேரத்திலும் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் வகையிலும் டாப் முதல் மிடில் வரை 6 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற இவர் 91 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார். கடந்த 2015 முதல் பெங்களூரு, பஞ்சாப் அணிகளில் விளையாடிய போதிலும் இதேபோல் சுமாராக செயல்பட்டு வரும் அவர் தற்போது டெல்லியிலும் நிலையான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை என்பதால் அடுத்த வருடம் இவரை விடுவிக்கலாம்.

- Advertisement -

4. டிம் சைபர்ட்: நியூசிலாந்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் 3 போட்டிகளில் களமிறங்கி 2 இன்னிங்சில் வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய ஆடுகளங்களில் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத இவருக்கு பதில் டேவிட் வார்னர், ரோவ்மன் போவல் போன்ற அதிரடி வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் அடுத்த வருடம் இவரை விடுவித்து வேறு அதிரடி வீரர்களை வாங்கலாம்.

5. லுங்கி நிகிடி: கடந்த 2018 காலகட்டத்தில் சென்னையின் நம்பிக்கை நட்சத்திரமாக 14 போட்டிகளில் விளையாடி அசத்திய இவர் அதன்பின் ரன்களை வாரி வழங்கியதால் கடந்த வருடம் கழற்றி விடப்பட்டார்.

இவரை வாங்கிய டெல்லி நிர்வாகம் இந்த வருடம் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. ஏனெனில் கலீல் அகமது, சேட்டன் சக்காரியா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையான அளவு இருப்பதால் இவரையும் அடுத்த வருடம் தாராளமாக விடுவித்து வேறு வீரர்களை வாங்க முயற்சிக்கலாம்.

சந்தேக பட்டியல்:
1. ஷார்துல் தாகூர்: சமீபத்திய சீசன்களில் சென்னைக்காகவும் இந்தியாவுக்காகவும் சிறப்பாக செயல்பட்டு “லார்ட்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவரை இந்த வருடம் 10.75 கோடி என்ற பெரிய தொகைக்கு டெல்லி நிர்வாகம் போட்டி போட்டு வாங்கியது.

ஆனால் முழுமையாக களமிறங்கிய 14 போட்டிகளில் பேட்டிங்கில் 10 இன்னிங்சில் 120 ரன்களை 15.00 என்ற சராசரியில் மட்டுமே எடுத்த இவர் பந்து வீச்சிலும் 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 9.79 என்ற மோசமான எக்கனாமியில் எடுத்து சுமாராக செயல்பட்டார். இருப்பினும் இவர் திடீரென சிறப்பாக செயல்படக் கூடியவர் என்பதால் ஒருவேளை டெல்லி இவரை தக்கவைக்க விரும்பினால் இந்த வருடத்தை விட குறைந்த தொகையை தக்க வைக்கலாம் அல்லது விடுவித்து விடலாம்.

Advertisement