ஓய்வை வாபஸ் வாங்கி மீண்டும் சர்வதேச போட்டியில் ஆடுங்கள் – முன்னணி வீரருக்கு அழைப்பு விடுத்த ரவி சாஸ்திரி

Ravi-Shastri

2004ஆம் பாண்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த ஏபி டிவிலியர்ஸ் 14 வருடங்கள் விளையாடிவிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். தனது 33 வயதிலேயே அவர் ஓய்வினை அறிவித்ததால் ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகினர்.

abd1

மேலும் கிரிக்கெட் விமர்சகர்கள் ஷாக்காகி கண்டிப்பாக நீங்கள் மீண்டும் வந்து ஆடவேண்டும் என்று தற்போது வரை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர் ஆட்டமும் தற்போது வரை அப்படித்தான் இருக்கிறது. சர்வதேச தரத்துக்கு இணையாக ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார் சமீபத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது 33 பந்துகளில் 73 ரன்கள் அடித்து விளாசினார். இதில் 5 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும்.

அந்த ஆடுகளத்தில் அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறிக்கொண்டிருக்கும் போது இவர் மட்டும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மீண்டும் ஏபி டிவில்லியர்ஸ் களத்திற்கு வந்து சர்வதேச போட்டியில் ஆட வேண்டும் என்று அழைத்து வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்திலும் இதனையே தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில் :

நேற்று இரவு நான் பார்த்தது நம்ப முடியாத ஒன்றாகும் ஏபி டிவிலியர்ஸ் தவிர யாராலும் இப்படி ஆட முடியாது என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் ஓய்வில் இருந்து திரும்ப வந்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு தனது பங்கினை அளிக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார் ரவிசாஸ்திரி. இந்த வருட ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஏபி டிவிலியர்ஸ் 228 ரன்கள் அடித்து இருக்கிறார்.

- Advertisement -