நல்லதை பாலோ பண்றதுல என்ன தப்பு? ரோஹித் சர்மாவை நம்பி இனி அர்த்தமில்ல – ரவி சாஸ்திரி ஓப்பன் டாக்

Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றில் அசத்தாலும் நாக் அவுட் சுற்றில் சொதப்பிய இந்தியா வழக்கம் போல கோப்பையை வெல்லாமல் வெறும் கையுடன் வெளியேறியது. இந்த தொடரில் பெரும்பாலும் சுமாராக செயல்பட்ட சீனியர் வீரர்களுக்கு மத்தியில் கேப்டனாக முன்னின்று அதிரடி காட்ட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் தடவியதுடன் கேப்டன்ஷிப் பொறுப்பிலும் அழுத்தமான செமி ஃபைனலில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்டார். இத்தனைக்கும் சாதாரண இரு தரப்பு தொடர்களில் அசால்டாக வெல்லும் அவர் அழுத்தம் நிறைந்த தொடர்களான ஆசிய கோப்பையிலும் டி20 உலக கோப்பையிலும் சொதப்பியுள்ளார்.

Kohli

- Advertisement -

அது போக ஏற்கனவே 36 வயதை கடந்து விட்ட அவர் சமீப காலங்களில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறுவதுடன் உடல் தகுதியிலும் சுமாராக காட்சியளிக்கிறார். அதன் காரணமாக அவருக்கு பதில் குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற துடிதுடிப்பான வேகப் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அது போக ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறினாலும் சமீப காலங்களில் அதிரடியான அணுகு முறையை பின்பற்றி ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ள இங்கிலாந்தை இந்திய அணி பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் காணப்படுகின்றன.

நல்லத்துக்காக தப்பில்லேயே:

இருப்பினும் இங்கிலாந்துக்கு பாடத்தை சொல்லிக் கொடுத்த ஐபிஎல் தொடரை நடத்தும் நாங்கள் அவர்களைப் பின்பற்றுவதா என்ற மனப்பான்மை இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் காணப்படுகிறது. ஆனால் நல்லதை பின்பற்றுவதில் தவறில்லையே என்ற வகையில் பேசும் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டிய ரோஹித் சர்மாவுக்கு பதில் டி20 கிரிக்கெட்டில் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்.

ENg vs IND Jos Buttler Alex hales

அத்துடன் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரால் பயனடையும் வெளிநாட்டு வீரர்களை போல வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடி இந்திய வீரர்கள் பயனடையும் நடைமுறையை இந்திய வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் புதிய கேப்டன் இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்ந்தவாறு ஒருவர் விளையாடுவது சுலபமல்ல. குறிப்பாக ரோஹித் சர்மா ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்குகிறார்”

- Advertisement -

“எனவே டி20 கிரிக்கெட்டில் புதிய கேப்டனை கண்டுபிடிப்பதில் எந்த தவறுமில்லை. அது ஹர்திக் பாண்டியாவாக இருந்தால் தாராளமாக இருக்கலாம். மேலும் ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இங்கிலாந்து நமது திறமைகளை எப்படி மாற்ற முடியும் என்பதை அமர்ந்து பேசி ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டுக்கும் சிறந்த வீரர்களை கண்டறிந்துள்ளார்கள். டி20 அல்லது 50 ஓவர் என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சீனியர் வீரர்கள் பெஞ்சில் அமரும் நிலை தேவைப்பட்டால் உட்கார்ந்தே தீர வேண்டும் என்ற நிலையை அவர்கள் கடைபிடிக்கிறார்கள்”

Shastri

“அத்துடன் அவர்களிடம் அதிகப்படியான மாற்றங்களை செய்யாமல் சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொண்டு அதிரடியாக பயமின்றி விளையாடும் இளம் வீரர்கள் உள்ளனர். எனவே அவர்களது அணுகு முறையை எளிதாக பின்பற்றலாம். ஏனெனில் இந்தியாவிடம் ஏராளமான திறமைகள் உள்ளது. என்ன கேட்டால் இந்த நியூசிலாந்து தொடரிலிருந்தே அவர்களைப் பின்பற்றுவதை நாம் தொடங்கலாம். காரணம் நமது வீரர்கள் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி திறமையானவர்களாக உள்ளனர். அதே சமயம் வெளிநாட்டு உள்ளூர் டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடும் முறையை துவக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement