உலகக்கோப்பை இறுதிபோட்டியில் இவர்தான் ஸ்டார் – ரவி சாஸ்திரி நம்பிக்கை

Ravi

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் தடைபட்டதால் மீதமுள்ள ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. 46.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது .மேலும் மீதமுள்ள 3.5 அவர்கள் இன்று வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ind vs Eng

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவேளை இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதினால் என்ன நடக்கும் என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : லீக் சுற்றில் இந்திய அணி தோல்வி அடைந்தபோது கடவுள் இங்கிலாந்து வீரர்களுடன் அவர்களது ஓய்வறையில் இருந்தார். ஆனால் ஒருவேளை இந்திய அணியுடன் இங்கிலாந்து இறுதிப்போட்டியில் மோதினால் இந்திய அணியின் ஓய்வறையில் கடவுள் இருப்பார் என்று நம்புகிறேன். எனவே இறுதி போட்டியில் நிச்சயம் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலககோப்பையை கைப்பற்றும் என நம்புகிறேன்.

Rohith

மேலும் உலகக்கோப்பை இறுதி போட்டியில் துவக்க வீரர் ரோஹித் சர்மா நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிவரும் துவக்க வீரரை பார்ப்பதை விட வேற பயிற்சியாளராக வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு தேவை. இறுதி போட்டியிலும் ரோஹித் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.