விராட் கோலியின் டயட் உணவுகளை முதன்முறையாக கேட்டதும் நானே ஆச்சரியப்பட்டேன் – ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்

Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி ஆகியோரது கூட்டணி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக இந்திய அணி மாறுவதற்கு அவர்களது இணை ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அந்த அளவிற்கு விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரது கூட்டணி சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே தங்களது ஆளுமையை வெளிக்காட்டி வந்தது.

shastri

- Advertisement -

ஆனாலும் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி கூட்டணியில் ஐசிசி கோப்பையை இந்திய அணி கைப்பற்றவில்லை என்கிற காரணத்தினால் இருவருமே தங்களது பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா மற்றும் டிராவிட் ஆகியோரது தலைமையில் இந்திய அணி பயணித்து வந்தாலும் அவர்களாலும் ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி முதல் முறையாக தான் விராட் கோலியின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து கேள்விப்பட்டபோது ஆச்சரியப்பட்டேன் என்பது குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் ஆரம்பத்தில் விராட் கோலியை சந்திக்கும்போது அவர் அனைத்தையும் சாப்பிடுவார். அதனால் தான் இவ்வளவு பலமாக காணப்படுகிறார் என்று நினைத்தேன்.

Kohli

ஆனால் விராட் கோலியுடன் நான் ஒருமுறை பேசும்போது அவர் ஒரு சைவம் என்றும் அசைவம் சாப்பிடுவதில்லை என்றும் என்னிடம் கூறினார். அதனை கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தன்னுடைய உணவு பழக்க வழக்கத்தை பல ஆண்டுகளாக அவர் சரியான முறையில் கடைபிடித்து வருகிறார். அதனால் தான் இன்றளவும் அவர் பிட்டாக இருக்கிறார்.

- Advertisement -

உலக அளவில் கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை விராட் கோலி ஒரு புலி. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் உடற்தகுதியை வைத்து ஒரு பென்ச் மார்க்கையே செட் செய்துவிட்டார். அவரைப் பார்த்தே தற்போது உலக கிரிக்கெட் வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர் என விராட் கோலியின் உணவு பழக்க வழக்கத்தை ரவி சாஸ்திரி பாராட்டி இருந்தார்.

இதையும் படிங்க : விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் சொன்ன அப்புறம் தான் நான் அந்த தப்ப திருத்திக்கிட்டேன் – அலெக்ஸ் கேரி பேட்டி

ரவி சாஸ்திரி குறிப்பிட்டது போலவே ஆரம்பத்தில் சற்று உடல் பருமனாக இருந்த விராட் கோலி அதன் பிறகு தன்னுடைய கிரிக்கெட்டில் முன்னேற்றத்தை காண வேண்டும் என்று தன்னுடைய கரியரின் ஆரம்ப கட்டத்திலேயே அசைவ உணவுகளை தவிர்த்து சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி என இன்றளவும் கிரிக்கெட்டின் மிக பிட்டான வீரராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement