ரோஹித் நிச்சயமா இந்த விஷயத்துல சும்மா இருக்க மாட்டாரு.. கண்டிப்பா கம்பேக் இருக்கு – ரவி சாஸ்திரி கருத்து

Ravi-Shastri
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி வலுவான சூழலுடன் இந்த தொடரில் களமிறங்கியது.

ரோஹித் சர்மா வலுவான கம்பேக் கொடுப்பாரு :

சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம் 12 ஆண்டு காலமாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருந்த வெற்றிப் பயணத்தை முடித்துக் கொண்டது.

இந்த தோல்வியானது இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ள வேளையில் நிச்சயம் இந்த தோல்வியை ரோகித் சர்மா அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் இந்த தோல்வி அவரை காயமடைய வைத்திருக்கும் என்றும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ரோகித் சர்மா எப்பொழுதுமே ஒரு விடயத்தை சாதாரணமான விடயமாக எடுத்துக் கொள்ள மாட்டார். களத்தில் அவர் சாதாரணமாக நிற்பது போல் தோன்றும் ஆனால் இந்த தோல்வி அவருக்கு மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கும். இதன் காரணமாக நிச்சயம் அடுத்து வரும் போட்டிகளில் அவர் மீண்டும் பலமாக கம்பேக் கொடுக்க விரும்புவார்.

இதையும் படிங்க : நல்லா விளையாடுனாலும் டீமில் இடமில்லை.. 3 ஆவது போட்டியில் இருந்து சுந்தரை நீக்க திட்டம் – காரணம் என்ன?

இந்த தொடரில் ஒரு அரைசதமே மட்டுமே அடித்திருந்தாலும் மற்ற இன்னிங்க்ஸ்களில் சொற்ப ரன்களில் அவர் ஆட்டமிழந்துள்ளார். எனவே நிச்சயம் அடுத்து வரும் போட்டிகளில் அவர் மிகப்பெரிய ரன் குவிப்பை வழங்குவார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இந்த தோல்வி கொடுத்த வலி அவரை மீண்டும் மிக வலுவான கம்பேக் கொடுக்க உதவும் என்று ரவி சாஸ்திரி தனது கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement