இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரை ஏற்கனவே நியூசிலாந்து அணியிடம் இழந்துவிட்டது. இதன் மூலம் 12 ஆண்டுகள் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தையும் முடித்துக் கொண்டது.
வாஷிங்டன் சுந்தர் 3 ஆவது போட்டியில் நீக்கம் :
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது, இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் கழட்டிவிடப்பட்ட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக புனே நகரில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பிளேயிங் லெவனில் இடம் பிடித்த வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸ்சில் 4 விக்கெட்டுகள் என 11 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை அசத்தலாக பயன்படுத்திக் கொண்ட வாஷிங்டன் சுந்தர் இனி தொடர்ச்சியாக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற சூழ்நிலையே நிலவுகிறது.
ஏனெனில் மும்பை வான்கடே மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்பதனால் இந்திய அணி ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய மூவருடன் செல்ல விரும்புவதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்திய அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.
இதையும் படிங்க : அவர் இல்லனா.. பலவீனமாகும் இந்திய அட்டாக்கை பாத்து ஆஸி பயப்பட மாட்டாங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி
அந்த வகையில் சுழற்பந்து வீச்சாளர்களாக அனுபவ வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திரா ஜடேஜா ஆகியோரே முதன்மை வீரர்களாக பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்பதனால் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.



